இலங்கை

கொழும்பு – மாளிகாவத்தையில் துப்பாக்கிச் சூடு: 12 வயது சிறுமி பலி!

  • September 17, 2023
  • 0 Comments

மாளிகாவத்தையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 12 வயது சிறுமியும் அவரது தந்தையும் காயமடைந்துள்ளதாக மருதானை பொலிஸார் தெரிவிக்கின்றனர். இன்று (17) ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் முச்சக்கரவண்டியில் பயணித்த குழுவினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி மரணமடைந்துள்ளார் என்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன

இந்தியா இலங்கை விளையாட்டு

2023 ஆசியக் கிண்ணம் இந்தியா வசமானது ; 10 விக்கெட்டுகளால் அபார வெற்றி

  • September 17, 2023
  • 0 Comments

2023ஆம் ஆண்டுக்கான ஆசிய கிண்ண தொடரை இந்தியா கைப்பற்றியுள்ளது. இந்திய அணி 8 ஆவது முறையாக ஆசிய கிண்ணத்தை கைப்பற்றியது. ஆசியக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டி இன்று (17) இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் கொழும்பு ஆர். பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 15.2 சகல விக்கெட்டுக்களையும் இழந்து 50 ஓட்டங்களை மாத்திரமே […]

இலங்கை

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சில உறுப்பினர்கள் மீது கொலை முயற்சி தாக்குதல்! தியாகதீபம் திலீபனின் ஊர்தியில் ஏற்பட்ட பதற்றம்

  • September 17, 2023
  • 0 Comments

திருகோணமலையில் தியாகதீபம் திலீபனின் ஊர்தியை வழிமறித்த பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த குழுவினர் அடித்து நொறுக்கி, அதில் பயணித்த நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் மீது கொலை முயற்சி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ன்றது. திருகோணமலை – கொழும்பு வீதியில், சர்தாபுர பகுதியில் இந்த கொலைவெறி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது தியாகி திலீபனின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தி பொத்துவிலில் இருந்து பயணத்தை ஆரம்பித்து, வடக்கு நோக்கி பயணித்துக் கொண்டிருந்தது. இன்று (17) திருகோணமலை […]

பொழுதுபோக்கு

மெகா படத்தில் மீண்டும் இணையும் சூர்யா மற்றும் மாதவன்?

  • September 17, 2023
  • 0 Comments

மணிரத்னத்தின் ‘ஆயுத எழுத்து’ படத்தில் சூர்யா மற்றும் மாதவன் இருவரும் இணைந்து நடித்திருந்தனர். இப்போது சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் ‘சூர்யா 43’ படத்தில் ஒரு முக்கிய கேரக்டருக்காக மாதவனை அணுகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பான் இந்திய நட்சத்திரம் தனது ஒப்புதலை வழங்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக வட்டாரங்கள் கூறுகின்றன. காரணம், சூர்யாவுடனான நட்பு மட்டுமல்ல, இயக்குனர் சுதாவுக்கும் ‘இறுதி சுற்று ‘ படம் மூலம் நெருக்கமானவர். ‘சூர்யா 43’ படத்திற்கு ஜி.வி இசையமைக்கிறார் என்று […]

பொழுதுபோக்கு

சில்க் ஸ்மிதாவை மீண்டும் உயிருடன் கொண்டு வந்த இயக்குனர்… மறுபிறவியா இருக்குமோ?

  • September 17, 2023
  • 0 Comments

விஷால் மற்றும் எஸ் ஜே சூர்யா நடித்து சமீபத்தில் ரிலீஸ் ஆன மார்க் ஆண்டனி படம் வசூல் வேட்டையாடி வருகிறது. நடிகர் விஷாலுக்கு இதுவரை கொடுக்காத வெற்றியை இந்த படம் கொடுத்திருக்கிறது. எஸ். ஜே. சூர்யா வழக்கம் போல தன்னுடைய நடிப்பால் ஸ்கோர் செய்து விட்டார். பலதரப்பட்ட மக்களிடம் இருந்தும் பாசிட்டிவ் ரிவியூ மட்டுமே இந்த படத்திற்கு கிடைத்திருக்கிறது. தியேட்டரில் ஒரு காட்சிக்கு மட்டும் பயங்கரமான ரெஸ்பான்ஸ் இருந்தது என்றால் அது சில்க் வரும் காட்சி தான். […]

ஐரோப்பா

ரஷ்யாவின் எச்சரிக்கையையும் மீறி உக்ரைன் துறைமுகத்திற்கு வந்த முதல் தானிய கப்பல்

  • September 17, 2023
  • 0 Comments

கருங்கடலின் புதிய பாதை வழியாக உக்ரைன் துறைமுகத்திற்கு இரண்டு தானிய கப்பல்கள் முதல் முறையாக வந்து சேர்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உக்ரைனின் சோர்னோமோர்ஸ்க் துறைமுகத்தில் சனிக்கிழமை அந்த இரு தானிய கப்பல்களும் வந்து சேர்ந்துள்ளது. இதனால் 20,000 டன் கோதுமை உலகச் சந்தையில் வந்து சேரும் என்றே நம்பப்படுகிறது.கருங்கடல் தானிய ஒப்பந்தத்தில் இருந்து ரஷ்யா வலுக்கட்டாயமாக வெளியேறிய பின்னர், முதல் முறையாக தானிய கப்பல் உக்ரைன் துறைமுகத்தில் வந்துள்ளது. ரஷ்ய படையெடுப்புக்கு பின்னர் உக்ரைன் துறைமுகத்தில் இருந்து […]

இலங்கை

யாழில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வருக்கு நேர்ந்த கதி

  • September 17, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணம், சுன்னாகம், தவடி பகுதியில் உள்ள வீடொன்றிற்கு வலுக்கட்டாயமாக நுழைந்த சிலர் பெற்றோல் குண்டை வீசியதில் வீட்டினுள் இருந்த 5 பேர் காயமடைந்துள்ளனர். நேற்று (16) இடம்பெற்ற சம்பவத்தின் போது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை, மகள் மற்றும் மகன் ஆகியோர் தீக்காயங்களுக்கு உள்ளாகி யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவருடன் குறித்த குடும்பத்தைச் சேர்ந்த மகள் ஒருவர் காதல் விவகாரத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், மேற்படி இளைஞன் தனது […]

மத்திய கிழக்கு

துருக்கி- அதிபரின் சிறப்பு ஆலோசகர்கள் 15 பேர் ராஜினாமா

  • September 17, 2023
  • 0 Comments

துருக்கியில் 2014ம் ஆண்டு முதல் அதிபர் தாயீப் எர்டோகன் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இவர் கடந்த ஜூன் மாதம் நடந்த தேர்தலில் போட்டியிட்டு மூன்றாவது முறையாக அதிபராக பொறுப்பேற்றார். இதனையடுத்து அங்கு புதிய அமைச்சரவை அறிவிக்கப்பட்டது. இதற்கு முன்பு மந்திரி பதவி வகிக்காத 90 சதவீதம் பேருக்கு இந்த முறை புதிதாக பொறுப்பு வழங்கப்பட்டது. இதனால் முந்தைய அமைச்சரவையில் இருந்த பலரும் தற்போது அதிபரின் சிறப்பு ஆலோசகர்களாக இருந்து வருகின்றனர். எனினும் அமைச்சரவையில் பதவி வழங்காததால் […]

பொழுதுபோக்கு

ஜவான் பார்ட் 2 – அட்லீ வெளியிட்ட சூப்பர் தகவல்

  • September 17, 2023
  • 0 Comments

நடிகர் ஷாருக்கான், நயன்தாரா லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த 7ம் தேதி சர்வதேச அளவில் வெளியாகி வசூல்வேட்டை நடத்தி வருகிறது ஜவான் படம். இந்தப் படத்தின்மூலம் பாலிவுட்டில் தன்னுடைய என்ட்ரியை சிறப்பாக்கியுள்ளார் இயக்குநர் அட்லி. இந்தப் படத்தின்மூலம் நயன்தாரா, இசையமைப்பாளர் அனிருத் ஆகியோரும் பாலிவுட்டில் என்ட்ரி கொடுத்துள்ளனர். இரண்டாவது வாரத்தில் திரையரங்குகளில் வெற்றிநடை போட்டுவரும் ஜவான் படம் சர்வதேச அளவில் சிறப்பான விமர்சனங்களையும் வசூலையும் குவித்து வருகிறது. இந்தப் படம் மிகப்பெரிய உற்சாகத்தை கொடுத்துள்ளதால் படத்தின் இரண்டாவது […]

இலங்கை

பருத்தித்துறை துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்ட உயிரிழந்த மீனவரின் உடல்!

  • September 17, 2023
  • 0 Comments

நடுக்கடலில் விழுந்து உயிரிழந்த மீனவரின் உடல் பருத்தித்துறை துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டது! பலநாள் மீன்பிடிப்படகில் மீன்பிடிக்க சென்ற நிலையில் கடலில் விழுந்து உயிரிழந்த மீனவர் ஒருவரின் சடலம் இன்று (17) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1.30 மணிக்கு பருத்தித்துறை துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. பருத்தித்துறை பகுதியில் இருந்து நேற்று (16) சனிக்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் மீன்பிடிக்க சென்ற சுமேதம், கரப்புர திருகோணமலையைச் சேர்ந்த 44 வயதுடைய ஆர்.பி.நிமல் கருணாரத்ன என்பவரே நடுக்கடலில் தவறி வீழ்ந்தது உயிரிழந்திருந்தார். இச் சம்பவம் தொடர்பில் […]

error: Content is protected !!