இந்தியா

தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு புதிய வீடுகள்!

  • September 18, 2023
  • 0 Comments

தமிழகத்திற்கு இடம்பெயர்ந்துள்ள இலங்கை தமிழர்களுக்கு புதிய வீடுகளை கட்டிக்கொடுக்க அம்மாநில முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுத்துள்ளார். இதன்படி 19 மறுவாழ்வு  முகாம்களில் 15000 வீடுகளை கட்டிக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறித்த வீடுகளை நிர்மாணிப்பதற்காக 79.70 மில்லியன் இந்திய ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. திருவண்ணாமலை, திருச்சிராப்பள்ளி, கோவை, ஈரோடு, சேலம், விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இந்த வீடுகள் கட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பா

XL  புல்லி” நாய் இனத்தை தடை செய்ய இங்கிலாந்து தீர்மானம்!

  • September 18, 2023
  • 0 Comments

“அமெரிக்கன்  XL  புல்லி” நாய் இனத்தை தடை செய்ய இங்கிலாந்து முடிவு செய்துள்ளது. நாய்கள் மிகவும் கொடூரமானவை என்றும், இதனால் மக்கள் அவதிப்படுவதாகவும் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். முக்கியமாக இந்த நாய்கள் கடித்ததால் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர்,  அவர்களில் சிறு குழந்தைகளும் உள்ளடங்குவதாகவும் தெரிவித்துள்ளார். எனவே இந்த ஆண்டு இறுதியிலிருந்து இங்கிலாந்தில் இந்த இன நாய்களின் இனப்பெருக்கத்தை தடை செய்ய புதிய சட்டங்கள் கொண்டு வரப்படும் என பிரதமர் ரிஷி சுனக் உறுதியளித்துள்ளார். […]

இந்தியா

ராஜஸ்தானில் 26 விரல்களுடன் பிறந்த அதிசய குழந்தை..!

  • September 18, 2023
  • 0 Comments

இந்தியாவில் 26 விரல்களுடன் பிறந்த அதிசய குழந்தை ஒன்று பிறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் பகுதியை சேர்ந்தவர் கோபால் பட்டாச்சாரியா. இவர் மத்திய ரிசர்வ் பொலிஸ் பாதுகாப்பு படையில் தலைமை காவலராக உள்ளார். இவரது மனைவி சர்ஜூ தேவி (25). இவருக்கு அண்மையில் அழகான பெண் குழந்தை பிறந்தது.அந்த குழந்தையின் ஒவ்வொரு கையிலும் 7 விரல்கள் மற்றும் ஒவ்வொரு காலிலும் 6 விரல்கள் என மொத்தம் 26 விரல்கள் இருந்தது. இதனால் அந்த […]

பொழுதுபோக்கு

மூன்று படங்களுடன் மோதும் சந்திரமுகி 2 ; நடக்கப்போவது என்ன?

  • September 18, 2023
  • 0 Comments

பி. வாசு இயக்கத்தில் லாரன்ஸ், கங்கனா ரானாவத் ஆகியோர் நடிப்பில் சந்திரமுகி 2 படம் வெளியாக இருக்கிறது. ஆரம்பத்தில் இந்த படம் செப்டம்பர் 15ஆம் தேதி ரிலீசாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அதன் பிறகு படத்தில் சில வேலைகள் இருப்பதால் தாமதமாக அதாவது செப்டம்பர் 28ஆம் தேதி இந்த படம் வெளியாக உள்ளதாக அறிவித்திருக்கின்றனர். மேலும் இதற்குக் காரணம் விஷாலின் மார்க் ஆண்டனி படம் வெளியாக உள்ளதால் அந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகம் இருந்த காரணத்தினாலும் […]

உலகம்

லிபியாவில் குவிந்து கிடக்கும் சடலங்கள் – அடையாளம் காண முடியாமல் திணறல்

  • September 18, 2023
  • 0 Comments

லிபியாவில் ஏற்பட்ட வெள்ளத்தால் குறைந்தது 11,300 பேர் உயிரிழந்துள்ள நிலையில் அவர்களின் சடலங்கள் குவிந்து கிடப்பதாக தெரியவந்துளளது. இந்த நிலையில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் அடையாளம் காண முடியாத நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. மருத்துவர் ஒருவர் உயிரிழந்தவர்களின் வயது, பாலினம் ஆகியவை முதலில் கண்டறியப்படும் என்றார். கறுப்பு நிறப் பிளாஸ்டிக் பையில் இருந்த சடலத்தை அவர் சோதனையிட்டார். அந்த நபரின் உடல் ஒரு வாரமாகக் கடலில் இருந்ததால் அவரை அடையாளம் காண இயலவில்லை என்று மருத்துவர் குறிப்பிட்டுள்ளார். அடுத்த […]

பொழுதுபோக்கு

பிரமாண்டமான படத்தில் ஸ்ரீதேவியின் மகள் தமிழில் அறிமுகமாகின்றார்?

  • September 18, 2023
  • 0 Comments

நடிகை ஸ்ரீதேவி மற்றும் தயாரிப்பாளர் போனி கபூரின் இளைய மகள் குஷி கபூர். அவரது சகோதரி ஜான்வி ஏற்கனவே நடிகையாக இருந்து வரும் நிலையில், குஷி இப்போது நடிகையாக அறிமுகமாக உள்ளார். டிசம்பர் 7, 2023 அன்று வெளியிடப்படும் நெட்ஃபிக்ஸ் திரைப்படமான ‘தி ஆர்ச்சீஸ்’ இல் அவரது முதல் திரைத் தோற்றம் வெளியாக உள்ளது. இப்போது, குஷி கபூரின் தமிழ் அறிமுகம் பற்றிய பரபரப்பான செய்தி கிடைத்துள்ளது. ஆகாஷ் (விக்னேஷ் சிவனின் உதவி இயக்குனர்) இயக்கியதாகக் கூறப்படும் […]

ஐரோப்பா

முக்கிய நாட்டின் மாணவர்களுக்கான விசாவை இரத்துச் செய்தது பிரான்ஸ்

  • September 18, 2023
  • 0 Comments

பிரான்ஸ் மாலி உள்ளிட்ட மூன்று ஆபிரிக்க நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு உயர்கல்வி கற்கை நெறிகளுக்கான விசா வழங்குவதை நிறுத்தியுள்ளது. மாலி, நைஜர், புர்கினா பாசோ ஆகிய மூன்று நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்குறித்த மூன்று ஆபிரிக்க நாடுகளிலும் இராணுவ சதி மூலம் ஆட்சிக்கவிழ்ப்பு இடம்பெற்றுள்ளது. பிரான்சின் ஆதரவு நாடாக இருந்த இந்த மூன்று நாடுகளுடனும் தற்போது முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. அதையடுத்தே இந்த முடிவை பிரான்ஸ் எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, தற்போது பிரான்சில் […]

வாழ்வியல்

வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்

  • September 18, 2023
  • 0 Comments

வெங்காயத்தில் பொதுவாகவே நார்ச்சத்துக்களும், விட்டமின்களும், உடலுக்கு நன்மை பயக்கும் தாதுக்களும் நிறைந்துள்ளன. இதில் ‘க்வெர்சட்டின்’ என்ற சல்பர் மூலமும் உள்ளது. இதனால் வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டால் உடலில் இன்சுலின் உற்பத்தி அதிகரிக்கும். நம் நாட்டில் பலரும் வெங்காயத்தை பச்சையாகவும் அல்லது உணவில் சேர்த்தும் சாப்பிடுகிறார்கள். ஆனால், வெங்காயத்தை பச்சையாக சாப்பிடும்போது அதில் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைப்பதாக ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். வெங்காயத்தை பச்சையாக சாப்பிடும்போது அதிலுள்ள எல்லா ஊட்டச்சத்துக்களும் நமக்கு நேரடியாகக் கிடைக்கிறது. இதனால் உடலில் […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் பாம்பால் நபருக்கு நேர்ந்த கதி

  • September 18, 2023
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் தனது செல்லப்பிராணி மலைப்பாம்பை பகிரங்கமாக காட்சிப்படுத்திய ஆஸ்திரேலிய நாட்டடவருக்கு 2,322 டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குறித்த பாம்புடன் குறித்த நபர் அலைச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்ட விதம் சமூக வலைத்தளங்கள் ஊடாக அறியப்பட்டது. கோல்ட் கோஸ்ட்டில் வசிக்கும் சம்பந்தப்பட்ட நபர் இந்த விலங்கை வளர்க்க உரிமம் பெற்றிருந்தாலும், அதில் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டுமே விலங்கை வளர்க்க வேண்டும். அந்த இடங்களில் இருந்து பாம்பை எந்த வகையிலும் வெளியே எடுத்தால் அதற்கான சிறப்பு அனுமதிப் பத்திரம் பெறப்பட வேண்டும் […]

இலங்கை

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரை குறி வைத்து துப்பாக்கி சூடு

  • September 18, 2023
  • 0 Comments

தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்னவை குறி வைத்து நேற்றிரவு இனந்தெரியாத நபர்களால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. எனினும் இந்த துப்பாக்கிச்சூட்டில் உறுப்பினருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. நாடாளுமன்ற உறுப்பினர் ஓட்டிச் சென்ற காரில் துப்பாக்கி தோட்டா பாய்ந்துள்ளது. நேற்றிரவு 10.35 மணியளவில் நாடாளுமன்ற உறுப்பினர் காரில் இருந்து இறங்கி வீட்டின் கேட்டை திறக்கும் போது இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிச் சூடு தொடர்பான விசாரணைகளை அனுராதபுரம் பொலிஸார் […]

error: Content is protected !!