மலைநாட்டில் அமைந்துள்ள பாடசாலை வளாகங்களில் சிறப்பு ஆய்வு நடவடிக்கை!
டித்வா சூறாவளியை தொடர்ந்து மலையக பகுதிகளில் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் பாதுகாப்பு பகுதிகள் தொடர்பான ஆய்வுகளை முன்னெடுத்து வருகிறது. இதற்கமைய நிலச்சரிவு அபாயத்தில் உள்ள பகுதிகளில் அமைந்துள்ள பாடசாலைகள் தொடர்பில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகங்களின் ஆதரவுடன் பாடசாலை வளாகங்களின் நிலச்சரிவு அபாய மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கண்டி, நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களில் தற்போது ஆய்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. டிசம்பர் 9 ஆம் திகதி தொடங்கிய இந்த ஆய்வுகளுக்கு, பேராதனை, மொரட்டுவ மற்றும் […]













