சுரேஷ் சாலேமீதான தடுப்பு காவல் உத்தரவு நீடிப்பு!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே மீதான தடுப்புக் காவல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டை நீதிவான் இசுரு நெத்திகுமரா இது தொடர்பான உத்தரவை நேற்று பிறப்பித்தார். குற்றப் புலனாய்வுப் பிரிவு , மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலேயை கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சந்தேக நபர் சார்பில் முன்னிலையான சட்டவாளர் அசித் சிறிவர்தன, […]













