இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

ஈரான் – இஸ்ரேல் மோதல்! இலங்கையர்களுக்கு எரிபொருள் தொடர்பில் வெளியான தகவல்

  • June 25, 2025
  • 0 Comments

ஈரான் – இஸ்ரேல் மோதல் குறித்த கவலைகள் இருந்த போதிலும், அடுத்த இரண்டு மாதங்களுக்கு போதுமான எரிபொருளை இலங்கை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டில் எரிபொருளுக்குத் தட்டுப்பாடு ஏற்படாது என இலங்கை கனியவள கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜனக ராஜகருணா உறுதியளித்துள்ளார். இலங்கைக்கான எரிபொருள் மலேசியா, சிங்கப்பூர், ஓமான் மற்றும் இந்தியா போன்ற பாதிக்கப்படாத நாடுகளிலிருந்து பெறப்படுகின்றன. லங்கா ஐஓசி, சினோபெக் மற்றும் ஆர்.எம் பார்க் போன்ற பிற விநியோகஸ்தர்களும் தடையற்ற விநியோகங்களை உறுதிப்படுத்தியுள்ளனர். மசகு எண்ணெய் இறக்குமதி நிலையானதாக […]

உலகம்

அமெரிக்கா தாக்குதலையடுத்து அதிகரித்த மசகு எண்ணெய் விலையில் மாற்றம்

  • June 25, 2025
  • 0 Comments

மசகு எண்ணெய் விலை தற்போது சற்று வீழ்ச்சியடைந்துள்ளது. ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து அதிகரித்திருந்த மசகு எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. அதன்படி, உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 65.08 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 67. 14 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது. இதேவேளை, உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய […]

ஆஸ்திரேலியா

போரில் சிக்கிய நூற்றுக்கும் மேற்பட்ட ஆஸ்திரேலியர்கள் மீட்பு

  • June 25, 2025
  • 0 Comments

இஸ்ரேலின் டெல் அவிவ் நகரிலிருந்து வெளியேற்றப்பட்ட 100க்கும் மேற்பட்ட ஆஸ்திரேலியர்களும் அவர்களது குடும்பத்தினரும் டுபாயில் தரையிறங்கியுள்ளனர். ஆஸ்திரேலிய பாதுகாப்பு உதவியுடன் 119 பேரை இந்த விமானம் அழைத்து வந்ததாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இருப்பினும், நாடு திரும்புவதற்கு அவர்கள் சொந்த விமானங்களுக்கு நிதியளிக்க வேண்டும் என்று வெளியுறவு மற்றும் வர்த்தகத் துறை தெரிவித்துள்ளது. சிக்கித் தவிக்கும் ஆஸ்திரேலியர்களை வீட்டிற்கு அழைத்து வருவதற்கு வெளியுறவு மற்றும் வர்த்தகத் துறை மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் அளித்த ஆதரவைப் பாராட்டுவதாக பொருளாளர் ஜிம் […]

செய்தி

சீனாவில் வரலாறு காணாத மழை – இருப்பிடங்களை இழந்த 80,000 பேர்

  • June 25, 2025
  • 0 Comments

சீனாவில் ஏற்பட்டுள்ள பெரும் வெள்ளத்தில் சிக்கி 80,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இருப்பிடங்களை இழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் வரலாறு காணாத அளவுக்கு பருவமழை பெய்து வருகிறது. தொடர் மழையால் அந்நாட்டின் ஹூனான், ஹூபே மாகாணங்கள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றன. தெற்கு சீனாவில் உள்ள குய்சூ மாகாணம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. மழையால் ஏற்பட்ட வெள்ளம் குடியிருப்புகளை சூழ்ந்துள்ளதால் மக்கள் கடும் தவிப்புக்கு ஆளாகி இருக்கின்றனர். கிட்டத்தட்ட 80,000 மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு […]

செய்தி

ஈரான் வைத்திருந்த 400 கிலோ செறிவூட்டப்பட்ட யுரேனியம் தொடர்பில் நீடிக்கும் மர்மம்

  • June 25, 2025
  • 0 Comments

ஈரான் வைத்திருந்த 400 கிலோ செறிவூட்டப்பட்ட யுரேனியம் என்ன ஆனது என்ற தகவல் தெரியவில்லை என சர்வதேச அணுசக்தி முகமை தெரிவித்துள்ளது. இது குறித்த சோதனை அவசியம் என குறிப்பிடப்பட்டுள்ளது. மின்சாரம் தயாரிக்கவே அணுசக்தியை பயன்படுத்துகிறோம் என நீண்ட காலமாக கூறிவந்த ஈரான், தீடீரென அணு ஆயுதம் தயாரிப்பதாகவும், அணு ஆயுத பரவல் தடை சட்ட ஒப்பந்நத்தில் இருந்து விலகுவதாகவும் கூறியது. “நாங்கள் என்ன செய்ய வேண்டும் என யாரும் கூற முடியாது” என ஈரான் வெளியுறவுத்துறை […]

அறிவியல் & தொழில்நுட்பம்

ChatGPT-யிடம் கேட்கக் கூடாத 5 விடயங்கள்

  • June 25, 2025
  • 0 Comments

கடந்த 2022-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ChatGPT, பல கோடிக்கணக்கான யூஸர்கள் பயன்படுத்தும் வகையில் வெகுவிரைவாக உலகளாவிய பிரபலத்தை பெற்றுள்ளது. கூகுள் அடைந்ததை விட 5.5 மடங்கு வேகமாக ஒரு பில்லியன் தினசரி தேடல்களை எட்டியதாக கூறப்படுகிறது. செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படும் இந்த டூல் ரைட்டிங், கோடிங், ரிசர்ச் மற்றும் வாடிக்கையாளர் சேவை உள்ளிட்ட பல்வேறு பணிகளில் யூஸர்களுக்கு உதவுகிறது. இது தனிநபர்களுக்கும் வணிகங்களுக்கும் மிகவும் பயனுள்ளதாகவும் இருக்கிறது. எந்த கேள்வியாக இருந்தாலும் சரி, அதற்கு பதிலளிக்கும் திறன் […]

செய்தி

முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலேயே ரிஷப் பந்துக்கு தண்டனை விதிப்பு

  • June 25, 2025
  • 0 Comments

இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லீட்ஸ் நகரில் உள்ள ஹெட்டிங்லி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியின் 3-வது நளில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்து கொண்டிருந்த நிலையில் 61-வது ஓவரின் போது பந்தின் தன்மையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் பந்தை மாற்றுமாறு இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனும் துணை கேப்டனுமான ரிஷப் பந்த் களநடுவரிடம் கூறினார். பந்தை சோதித்து பார்த்த நடுவர், அதன் வடிவத்தில் எந்தவித […]

வட அமெரிக்கா

எதிர்பார்ப்பை திடீரென மாற்றிய டிரம்ப்

  • June 25, 2025
  • 0 Comments

ஈரானில் ஆட்சி மாற்றத்தை விரும்பவில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அது தேவையற்ற குழப்பத்தை உருவாக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், “ஈரானில் ஆட்சி மாற்றத்தை நான் விரும்பவில்லை. அனைத்தும் முடிந்த வரை விரைவாக அமைதியாவதை நான் பார்க்க விரும்புகிறேன். ஆட்சி மாற்றம் என்பது குழப்பத்தை ஏற்படுத்தும். மேலும், இவ்வளவு குழப்பங்களை நாங்கள் பார்க்க விரும்பவில்லை. அமைதியை நிலைநாட்ட ஈரான் விரும்புகிறது. அந்நாடு மட்டுமல்ல, இஸ்ரேலும் போர் நிறுத்தத்தை […]

இன்றைய முக்கிய செய்திகள் செய்தி வட அமெரிக்கா

டிரம்ப் கூறிய அணுசக்தி நிலையங்கள் அழிக்கப்படவில்லை – புலனாய்வு அமைப்புகள் தகவல்

  • June 25, 2025
  • 0 Comments

ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீதான அமெரிக்க தாக்குதல்கள் ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்கவில்லை, மாறாக பல மாத பின்னடைவை மட்டுமே ஏற்படுத்தியதாக உளவுத்துறை நிறுவனங்கள் தெரிவித்துள்ளது. பென்டகனின் ஆரம்ப சேத மதிப்பீட்டின் மூலம் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மதிப்பீடு “முற்றிலும் தவறானது” என்றும் ஜனாதிபதி டிரம்பை இழிவுபடுத்துவதற்கான “தெளிவான முயற்சி” என்றும் வெள்ளை மாளிகை கூறுகிறது. ஈரான் மீதான அமெரிக்க தாக்குதல் குறித்த உளவுத்துறை மதிப்பீட்டிற்கு டொனால்ட் டிரம்ப் பதிலளித்துள்ளார். ட்ரூத் சோஷியலில் தோன்றிய டிரம்ப், அமெரிக்க […]

இலங்கை

இலங்கையின் பல பகுதிகளில் இன்றும் மழை

  • June 25, 2025
  • 0 Comments

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (25) அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடமேல் மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என்று அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னிறிவித்தலில் குறிப்பிப்பட்டுள்ளது. ஊவா மாகாணத்திலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவு பகுதிகள், […]

error: Content is protected !!