இன்றைய முக்கிய செய்திகள் வட அமெரிக்கா

பறக்கும் போது திடீரென வெளியேறிய புகை – அவசரமாக தரையிறங்கிய அமெரிக்க விமானம்

  • June 26, 2025
  • 0 Comments

லொஸ் வெகாஸ் விமான நிலையத்தில் அமெரிக்க பயணிகள் விமானம் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் பறக்கும் போது திடீரென புகை வெளியேறிய நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. லொஸ் வெகாஸ் விமான நிலையத்தில் இருந்து வட கரோலினா மாகாணத்தில் உள்ள சார்லட் டக்ளஸ் சர்வதேச விமான நிலையத்திற்கு, 153 பயணிகள் மற்றும் 6 பணியாளர்களுடன் அமெரிக்கன் ஏர்லைன் விமானம் புறப்பட்டது. வானிலை பறக்கத் தொடங்கிய சிறிது நிமிடங்களிலேயே இன்ஜினில் கோளாறு ஏற்பட்டு, புகை […]

இலங்கை

இத்தாலிக்கு தப்பிச் செல்ல முயன்ற 2 யாழ் இளைஞர்கள் கைது

  • June 26, 2025
  • 0 Comments

போலி இந்திய கடவுச்சீட்டுகளை பயன்படுத்தி அபுதாபி வழியாக இத்தாலிக்குத் தப்பிச் செல்ல முயன்ற இரண்டு இலங்கை இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் எல்லை கண்காணிப்புப் பிரிவின் அதிகாரிகள் குழுவால் இது செய்யப்பட்டது. அபுதாபிக்குப் புறப்படவிருந்த எதிஹாட் ஏர்வேஸ் விமானத்தில் ஏறுவதற்காக அவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திருந்தனர். பயணிகள் முனையத்தில் அவர்கள் காத்திருந்தபோது, ​​குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை அதிகாரிகள் தங்கள் சாமான்களைச் சரிபார்த்தபோது, ​​உள்ளே இரண்டு […]

இன்றைய முக்கிய செய்திகள் உலகம்

2 செய்தி சேவைகள் மீது கடும் கோபத்தை வெளிப்படுத்திய டிரம்ப்

  • June 26, 2025
  • 0 Comments

உலகின் மிகவும் பிரபலமான இரண்டு செய்தி சேவைகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடுமையாக சாடியுள்ளார். தனது அதிகாரப்பூர்வ X கணக்கில் ஒரு பதிவில், ஈரான் மீதான அமெரிக்க வான்வழித் தாக்குதல்கள் தொடர்பாக நியூயார்க் டைம்ஸ் மற்றும் CNN ஆகியவை மிகப்பெரிய ஊடக மோசடியைச் செய்துள்ளதாக ஜனாதிபதி டிரம்ப் கூறுகிறார். போலி செய்திகளை உருவாக்கி, ஈரானிய அணுசக்தி நிலையங்கள் மீதான அமெரிக்க விமானப்படையின் தாக்குதல்களையும் அவர்கள் செய்த சிறந்த பணிகளையும் குறைத்து மதிப்பிட்டதாக டிரம்ப் குற்றம் சாட்டுகிறார். […]

உலகம்

மெக்சிகோவை உலுக்கிய துப்பாக்கிச்சூடு – 12 பேர் பலி – 20 படுகாயம்

  • June 26, 2025
  • 0 Comments

மெக்சிகோவின் குவானாஜுவாடோ பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் கொல்லப்பட்டனர். கிறிஸ்துவ மத நிகழ்ச்சியின் போது கூட்டத்தினர் மீது மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் பலியாகினர். அப்பகுதியில் ஒரு கொண்டாட்டத்தின் போது துப்பாக்கிச் சூடு நடந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மெக்சிகோவின் குவானாஜுவாடோ மாகாணம் இரபுவாடோ நகரில் கிறிஸ்தவ மத நிகழ்ச்சியில் மக்கள் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் புனித யோவான் பாப்டிஸ்டைக் கொண்டாடும் விதமாக மது அருந்திக் கொண்டு தெருவில் நடனமாடி […]

மத்திய கிழக்கு

அணுசக்தி நிலையங்கள் கடுமையாக சேதம் – முதல் முறையாக ஒப்புக்கொண்ட ஈரான்

  • June 26, 2025
  • 0 Comments

ஈரானிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் எஸ்மாயில் பகாயி, அமெரிக்காவின் தாக்குதல்களால் நாட்டின் அணுசக்தி நிலையங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளார். அல் ஜசீராவுக்கு அளித்த பேட்டியில் அவர் இந்தக் கருத்துக்களை தெரிவித்தார். ஞாயிற்றுக்கிழமை அமெரிக்க B-2 குண்டுவீச்சு விமானங்கள் பதுங்கு குழி வெடிகுண்டுகளைப் பயன்படுத்தி நடத்திய தாக்குதல்களால் இந்த சேதம் ஏற்பட்டதாக அவர் கூறினார். இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான போர் நிறுத்தம் போரின் 12வது நாளில் தொடங்கியது. ஆனால் இரு தரப்பினரும் ஏவுகணைகள், ட்ரோன்கள் மற்றும் குண்டுகளை […]

அறிவியல் & தொழில்நுட்பம்

WhatsApp அறிமுகம் செய்யும் புதிய வசதி

  • June 26, 2025
  • 0 Comments

உலக அளவில் கோடிக்கணக்கான பயனர்களைக் கொண்ட வாட்ஸ்அப், தனது பயன்பாட்டை மேலும் எளிதாக்கும் வகையில், ஆவண ஸ்கேனிங் அம்சத்தை (Document Scanning Feature) அறிமுகப்படுத்தியுள்ளது. இனி பயனர்கள் தனியாக ஸ்கேனர் செயலிகளை நாட வேண்டிய அவசியம் இருக்காது. நேரடியாக வாட்ஸ்அப்பிலேயே ஆவணங்களை ஸ்கேன் செய்து பி.டி.எஃப். (PDF) கோப்புகளாக அனுப்ப முடியும். இதுவரை ஆவணங்களை ஸ்கேன் செய்ய தனியாக ஸ்கேனர் ஆப் (அ) கூகுள் டிரைவ் போன்ற பிற சேவைகளை நம்பியிருக்க வேண்டியிருந்தது. ஆனால், WhatsApp தனது […]

இன்றைய முக்கிய செய்திகள் உலகம்

அணு ஆயுத திட்டத்தை ஈரான் மீண்டும் ஆரம்பித்தால் தாக்குவோம்: டிரம்ப் எச்சரிக்கை

  • June 26, 2025
  • 0 Comments

அணு ஆயுத திட்டத்தை மீண்டும் ஆரம்பித்தால் ஈரானை தாக்குவோம், அந்த தாக்குதல் தற்போது நடந்ததைவிட மோசமானதாக இருக்கும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். மேற்காசிய நாடுகளான இஸ்ரேல் – ஈரான் இடையேயான போரில் ஈரானின் அணுசக்தி நிலையங்களை அமெரிக்க விமானப்படைகள் குண்டு வீசி அழித்தன. அதன்பின், இரு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்தத்தை டிரம்ப் நேற்று முன்தினம் அறிவித்தார். இந்நிலையில், ஐரோப்பிய நாடான நெதர்லாந்தின் த ஹேக்கில் நடக்கும், ‘நேட்டோ’ எனப்படும் வடக்கு அட்லாண்டிக் […]

வட அமெரிக்கா

ஈரானுடன் அணுசக்தி ஒப்பந்தம் தேவையில்லை என அறிவித்த டிரம்ப்

  • June 26, 2025
  • 0 Comments

ஈரானுடன் அணுச்சக்தி ஒப்பந்தம் இனி தேவையில்லை என தான் நம்புவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானின் அணுச்சக்தி ஆற்றல் அழிக்கப்பட்டுள்ளது என உறுதியுடன் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நேட்டோ மாநாட்டில் பேசியபோது ஈரானின் அணுச்சக்தித் தளங்கள் அழிக்கப்பட்டதாக டிரம்ப் மீண்டும் வலியுறுத்தினார். ஈரானின் அணுச்சக்தித் தளங்கள்மீது அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதல்களையொட்டிய தற்காப்பு அமைச்சின் அறிக்கை கசிந்தது. அதனை விமர்சித்தவர்களை டிரம்ப் சாடினார். அமெரிக்கத் தற்காப்பு அமைச்சர் பீட் ஹெக்செத் இன்று நடத்தவிருக்கும் செய்தியாளர்க் […]

விளையாட்டு

இந்தியா தோல்வி – விராட் இல்லை என வேதனையடைந்த ரசிகர்கள்!

  • June 26, 2025
  • 0 Comments

இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. விராட் கோலி மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா ஆகியோ டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில், அவர்கள் இல்லாமல் இந்த தொடரில் இந்திய அணி எப்படி விளையாடப்போகிறது என்கிற கேள்விகளும் எழுந்தது. ஆனால், பேட்டிங்கில் முடிந்த அளவுக்கு முதல் போட்டியில் இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள் என்று தான் சொல்லவேண்டும். ஜூன் 20-24 தேதிகளில் லீட்ஸ், […]

இலங்கை

இலங்கை காலநிலை தொடர்பில் முக்கிய எச்சரிக்கை

  • June 26, 2025
  • 0 Comments

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் எனவும் சில இடங்களில் சுமார் 50 மில்லிமீற்றர் வரையிலான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அனுராதபுரம் மற்றும் மாத்தளை மாவட்டங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும். ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. மத்திய மலைநாட்டின் மேற்குப் […]

error: Content is protected !!