Site icon Tamil News

இலங்கை காலநிலையில் மாற்றம் – பொது மக்களுக்கு எச்சரிக்கை

மத்திய வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்கு திசையில் தோன்றிய தாழமுக்கம் புயலாக மாற்றம் பெறுவதற்கான நிலைமைகள் உருவாக தொடங்கியுள்ளன.

இன்று இரவு அல்லது நாளை காலை இது புயலாக மாற்றம் பெறும் என யாழ். பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா எதிர்வுகூறியுள்ளார்.

புயலின் தோற்றத்திற்கு கடற்பிரதேசத்தில் நிலவும் அதிகூடிய வெப்பநிலையே அடிப்படையான காரணியாகும் என மேலும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை வங்காள விரிகுடாவில் உருவாகவுள்ள இந்த புயல் எமது பிரதேசத்தில் காணப்பட்ட ஈரப்பதனை தன்னுடைய வெளி மற்றும் உள்வளையப் பகுதிகளுக்கு ஈர்த்துக் கொண்டிருப்பதன் காரணமாக வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் வெப்பநிலை அதிகரிக்கும்.சில பிரதேசங்களில் மிதமான மழை கிடைத்தாலும், வெப்பநிலையும் உயர்வாக இருக்கும். இந்நிலைமை எதிர்வரும் 24.05.2023 வரை காணப்படும்.

முன்னர் குறிப்பிட்டது போன்று பங்களாதேஷுக்கும் மியன்மாருக்கும் இடையில் இந்த புயல் கரையைக் கடக்கும். ஏற்கனவே குறிப்பிட்டது போல இந்த புயலால் இலங்கையின் எந்த ஒரு பகுதிக்கும் நேரடியான பாதிப்பு கிடையாது.எதிர்வரும் 12ஆம் திகதி வரை வடக்கு மாகாணத்தின் சில பகுதிகளுக்கு அவ்வப்போது மிதமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

Exit mobile version