பொழுதுபோக்கு

முதன்முறையாக வைல்ட் கார்ட் மூலம் நுழையும் கணவன் – மனைவி…

பிக் பாஸ் 9 தமிழ் தொடங்கி மூன்று வாரங்களைக் கடந்துவிட்ட நிலையில், வைல்ட் கார்டு வரவு குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளன.

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 5 ஆம் திகதி முதல் பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. பிக் பாஸ் வீடு மற்றும் பிக் பாஸ் சொகுசு வீடு என இரு அணிகளாகப் போட்டி நடைபெற்று வருகிறது.

முதல் வாரத்தில் மட்டும் நந்தினி தாமாக விருப்பத்தின் அடிப்படையில் வெளியேறினார். முதல் வாரத்தில் இயக்குநர் பிரவீன் காந்தி வெளியேறிய நிலையில், இரண்டாவது வாரம் அப்சரா வெளியேறினார்.

தற்போது மூன்றாவது வாரத்தில் போட்டி விறுவிறுப்படைந்துள்ளது. இந்த வாரத்தில், அரோரா, துஷார், ஆதிரை, கானா வினோத், ரம்யா ஜோ, அகோரி கலையரசன், பிரவீன், சுபிக்ஷா, வியனா ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் மக்களிடம் குறைந்த வாக்குகளைப் பெற்றவர்கள் இந்த வாரம் போட்டியில் இருந்து வெளியேறுவார்.

பிக் பாஸ் 9 நிகழ்ச்சியில் 20 போட்டியாளர்கள் பங்கேற்றதால், இம்முறை வைல்ட் கார்டு போட்டியாளர்கள் இல்லை எனக் கூறப்பட்டது. ஆனால், தற்போது பலரும் எதிர்பாராத விதமாக இரு போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் நுழையவுள்ளனர்.

தொலைக்காட்சித் தொகுப்பாளராக இருந்து சின்ன திரைகளில் நடித்து கவனம் பெற்ற நடிகர் ப்ரஜின் மற்றும் வரின் மனைவி சான்ட்ரா ஆகியோர் பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களாக நுழையவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதன்மூலம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் கணவன் – மனைவி என்ற பெருமையை இவர்கள் பெறவுள்ளனர்.

(Visited 5 times, 1 visits today)

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்