மோடியின் அழைப்பை ஏற்று இந்தியா வந்தார் இம்மானுவேல் மேக்ரான்
75வது இந்திய குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் இந்தியா வந்துள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் நெருங்கிய நண்பரான இவர், பிரதமர் மோடியின் சிறப்பு அழைப்பை ஏற்று இந்தியா வந்துள்ளார்.
பிரான்ஸ் அதிபரை ஏற்றிச் சென்ற விமானம் ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூர் விமான நிலையத்தை வந்தடைந்தது, அவரை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் வரவேற்றார்.
பிரதமர் மோடியுடன் ஜெய்ப்பூரில் நடக்கும் பல கலாச்சார நிகழ்ச்சிகளில் பங்கேற்க பிரான்ஸ் அதிபர் மேக்ரான் தயாராக உள்ளார்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் பிரான்சில் நடந்த பாஸ்டில் தின கொண்டாட்டத்தில் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
(Visited 2 times, 1 visits today)