ஆசியா

சிங்கப்பூர் வர முயற்சிக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு சிக்கல்

சிங்கப்பூருக்கு வெளிநாட்டு ஊழியர்கள் வர முடியாத சூழல் நிலவுவதாக கூறப்படுகிறது.

பலருக்கு வேலை விசா கிடைத்தும் அவர்களால் சிங்கப்பூர் வர முடியவில்லை என தெரியவந்துள்ளது.

விசா வர நீண்ட காலம் காத்திருந்தது போக தற்போது விசா வந்தும் வேலைக்கு சேர நீண்ட காலம் எடுப்பதாக பல வெளிநாட்டு ஊழியர்கள் கூறுகின்றன.

மனிதவள அமைச்சகம் அனுமதி வழங்கியும் நீண்ட காலம் காத்திருக்கும் நிலை எதனால் ஏற்படுகிறது என்ற கேள்வி நமக்குள் ஓடிக்கொண்டே இருக்கும். வேலை விசா உங்களுக்கு வந்தாலும் நீங்கள் இங்கு வந்து தங்கும் இடத்துக்கான பதிவு முக்கியம் என்பதை நாம் முன்னர் பதிவிட்டு இருந்தோம்.

ஏனெனில், சிங்கப்பூரில் தங்கும் இடங்கள் கிட்டத்தட்ட நிரம்பியதாக செய்திகள் வருகின்றன. ஆகையால், ஊழியர்களுக்கு முதலாளிகளே தங்கும் இடம் ஏற்பாடு செய்ய வேண்டியுள்ளதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

தங்கும் இடம் பற்றாக்குறை, அதிகரிக்கும் வாடகை போன்றவை வேலைக்கு இங்கு கொண்டு வர தடையாக உள்ளன. வெளிநாட்டு ஊழியர்களுக்கு தங்கும் இடத்தை ஏற்பாடு செய்து அதனை மனிதவள அமைச்சகத்திடம் பதிவு செய்த பின்னர் தான் இங்கு வரவைக்க முடியும்.

ஆகவே மனிதவள அமைச்சகத்தின் அனுமதி மற்றும் IP கிடைத்தும் சிலருக்கு கால தாமதம் ஏற்படுகிறது.

SR

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!