பொழுதுபோக்கு

சூர்யாவுடன் இணையும் அயலான் இயக்குநர்… மெகா பட்ஜெட்டில் மற்றுமொரு படம் தயார்

சூர்யாவின் கங்குவா இந்தாண்டு வெளியாகவுள்ளது. இதனைத் தொடர்ந்து சூர்யா 43, வாடிவாசல் படங்களில் நடிக்கவுள்ளார் சூர்யா. அதன் பின்னர் அவரது புதிய படத்தை அயலான் இயக்குநர் ரவிக்குமார் இயக்கவுள்ளது உறுதியாகியுள்ளது.

இன்று நேற்று நாளை, அயலான் படங்கள் வரிசையில் இதுவும் சயின்ஸ் பிக்‌ஷன் ஜானரில் உருவாகவுள்ளதாக ரவிக்குமார் கூறியுள்ளார்.

கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா, தற்போது கங்குவா படத்தில் நடித்து வருகிறார். சிறுத்தை சிவா இயக்கும் இந்தப் படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இதனைத் தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கும் படத்தில் நடிக்கிறார் சூர்யா. இந்தப் படத்தின் ஷூட்டிங் பொங்கலுக்குப் பின்னர் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தொடங்குகிறது.

இந்த நிலையில் தான் சூர்யாவை சந்தித்து ஒரு சயின்ஸ் பிக்‌ஷன் ஜானர் கதையை கூறியுள்ளார் ரவிக்குமார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்காக சூர்யாவும் கால்ஷீட் கொடுத்துவிட்டாராம்.

இந்தப் படத்தையும் சயின்ஸ் பிக்‌ஷன் ஜானரில் இயக்கவுள்ள ரவிக்குமார், அபோகாலிப்டிக் பின்னணியில் இருக்கும் என சொல்லப்படுகிறது.

இதற்கு முன்னரும் சூர்யா 24 என்ற சயின்ஸ் பிக்‌ஷன் ஜானரில் நடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

(Visited 6 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content