பொழுதுபோக்கு

படத்தின் ரிலீஸ் திகதி வெளியிடுதல் தொடர்பில் லோகேஷ் எடுத்துள்ள திடீர் முடிவு!

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய ’லியோ’ படம் கடந்த அக்டோபரில் வெளியானது. இந்தப் படத்திற்கு கலவையான விமர்சனம் வந்ததாலும் 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து இந்த ஆண்டின் சூப்பர் ஹிட் படங்கள் பட்டியலில் இடம்பெற்றது.

இதையடுத்து அடுத்ததாக ரஜினியை வைத்து ‘தலைவர் 171’ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இது தொடர்பாக பேட்டி ஒன்றில் பேசியிருக்கும் லோகேஷ், ”லியோ படம் சக்சஸ் கொடுத்திருந்தாலும் படத்தின் பின் பாதி சரியாக எடுக்கப்படவில்லை என்று பரவலாக விமர்சனங்கள் எழுந்தன. படத்தின் ரிலீஸ் திகதியை முன்கூட்டியே அறிவித்துவிட்டு படத்தை ஷூட் செய்வதால் சில நேரங்களில் இதுபோல ஆகிவிடுகிறது.

ரிலீஸ் திகதி நெருங்குகிறதே என்ற பதற்றத்தில் படத்தை அவசர அவசரமாக எடுப்பதே இதற்கு முக்கிய காரணம். ஆனால், எனது படங்களில் இனிமேல் அப்படி நடக்காது. ஏனென்றால் இனிமேல் நான் ரிலீஸ் திகதியை முன்கூட்டியே அறிவிக்கப் போவதில்லை. ரஜினியின் ‘தலைவர் 171’ படத்தை அப்படித்தான் நிதானமாக இயக்கப் போகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

(Visited 4 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content