இலங்கை

அஸ்வெசும இரண்டாம் கட்ட விண்ணப்பம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்காக எதிர்வரும் ஜனவரி மாதம் விண்ணப்பங்கள் கோரப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இரண்டாம் கட்டத்தை ஆரம்பிப்பதற்கு முன்னர் முதல் கட்டம் பற்றிய விரிவான மீளாய்வை மேற்கொள்ள அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முதற்கட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் மற்றும் பல்வேறு தரப்பினரால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகள் குறித்தும் கவனத்தில் கொள்ளப்படும் என இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

கடந்த ஒக்டோபர் மாதம் பதினாலு இலட்சத்து ஆறாயிரத்து தொள்ளாயிரத்து முப்பது பயனாளிகளுக்கான பணம் தற்போது வங்கி கணக்குகளில் வைப்பிலிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பயனாளிகளின் எண்ணிக்கையை 20 இலட்சமாக உயர்த்தி பொருத்தமானவர்களை தெரிவு செய்ய அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகவும், அதற்காக 2024 ஆம் ஆண்டிற்கு 205 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மேலும் தெரிவித்தார்.

 

 

 

 

 

(Visited 3 times, 1 visits today)

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்