இலங்கை

யாழ் கல்வியங்காட்டு பகுதியில் அமைந்துள்ள உணவ உரிமையாளர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல்!

கடந்த திங்கட்கிழமை யாழ் மாநகர சபையின் நல்லூர் பிரிவு பொது சுகாதார பரிசோதகர் பு.ஆறுமுகதாசன் தலைமையிலான குழுவினரால் கல்வியங்காட்டு பகுதியில் அமைந்துள்ள உணவகம் திடீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

இதன்போது பல சுகாதார சீர்கேடு குறைபாடுகள் இனங்காணப்பட்டுள்ளன.  ஏற்கனவே பல தடவைகள் அறிவுறுத்தப்பட்ட நிலையிலும் தொடர்ந்து சுகாதார சீர்கேட்டுடனேயே குறித்த உணவகம் இயங்கி வந்தமை அவதானிக்கப்பட்டது.

அத்துடன் உணவகத்தில் திகதி காலாவதியான உணவு பொருட்களும் பொது சுகாதார பரிசோதகர்களால் கைப்பற்றப்பட்டது.

இதனையடுத்து உணவக உரிமையாளரிற்கு எதிராக நீதிமன்றில் இன்று (29.11) புதன்கிழமை பொது சுகாதார பரிசோதகர் பு.ஆறுமுகதாசனால் சுகாதார சீர்கேடு, காலாவதியான உணவு பொருட்கள் வைத்திருந்தமை என்பவற்றிற்கு தனித்தனியே வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

வழக்கினை விசாரித்த நீதவான் குறைபாடுகள் நிவர்த்தி செய்யும் வரை உணவகத்தினை சீல் வைத்து மூடுமாறு பொது சுகாதார பரிசோதகரிற்கு கட்டளை வழங்கினார்.

இதனையடுத்து பொது சுகாதார பரிசோதகர் பு. ஆறுமுகதாசனினால் உணவகம் சீல் வைத்து மூடப்பட்டது.

(Visited 8 times, 1 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்