இந்தியா

பார்ட்டிகளில் போதைக்காக பாம்பு விஷம் : சிக்கிய பிக்பாஸ் வெற்றியாளர்!

இந்தியில் பிரபல youtuber ஆக திகழ்பவர் எல்விஷ் யாதவ் (Elvish Yadav). இதன் மூலம் பிரபலமான இவர், பிக் பாஸ் ஓடிடி 2-வது சீசனில் கலந்துகொண்டு மேலும் பிரபலமானார். அதோடு சல்மான் கான் தொகுத்து வழங்கிய இந்த ஷோவில் வெற்றியாளராகவும் ஆனார். இந்த சூழலில் இவர் பாம்பு விஷத்தை போதைக்காக பயன்படுத்துவதாக புகார் எழுந்துள்ள நிலையில், இவரை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் உத்தர பிரதேசத்தின் நொய்டா நகரில் தனியார் பார்ட்டி ஒன்று நடைபெற்றது. இந்த பார்ட்டியில் பாம்புகளையும், அவற்றின் விஷத்தையும் போதைக்காகப் பயன்படுத்தப்படுவதாக பாஜக எம்.பி மேனகா காந்தியின் தொண்டு நிறுவனமான, பீப்பிள் ஃபார் அனிமல்ஸ் (People For Animals) என்ற பிராணிகள் நலன் பாதுகாப்பு சார்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் புகார் கொடுத்தது.

அதோடு அந்த பார்ட்டியின்போது வெளிநாட்டுப் பெண் ஒருவரை பாம்பு விஷத்தை அருந்தச் செய்ததுடன் விதவிதமான போதைப் பொருட்களையும் உட்கொள்ளச் செய்ததாகவும் வீடியோ ஆதாரத்துடன் புகார் தெரிவித்தது. அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் இந்த வழக்கு தொடர்பாக 5 பேரை கைது செய்தனர். மேலும், பார்ட்டி நடந்த இடத்திலிருந்து 5 ராஜநாக வகையைச் சேர்ந்த 9 பாம்புகள் மற்றும் பாம்பு விஷங்கள் உள்ளிட்டவையை பொலிஸார் பறிமுதல் செய்தனர்.

Rave Party With Snake Venom: Noida Police Arrest Five for 'Rave Party' and  Using Snake Venom; Bigg Boss Winner Elvish Yadav Named in FIR | 📰 LatestLY

தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் Youtuber எல்விஷ் யாதவ் பெயரை கூறினர். மேலும் எல்விஷ் யாதவ் நடத்தும் இதுபோன்ற பார்ட்டிகளுக்கு பாம்புகளையும், பாம்பு விஷங்களையும் வழங்குவதாகவும் கைது செய்யப்பட்டவர்கள் வாக்குமூலம் அளித்தனர். இதைத்தொடர்ந்து எல்விஷ் யாதவ் மீது வழக்குப்பதிவு செய்த பொலிஸார் தலைமறைவாக உள்ள அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதனிடையே, தனக்கும் இதற்கும் எந்த சம்மந்தமில்லை என்றும், ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டினை முன்வைத்து தனது பேருக்கும் புகழுக்கும் களங்கம் விளைவிக்க வேண்டாம் என்றும் எல்விஷ் யாதவ், சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாகி பலரது கருத்துகளையும் பெற்று வருகிறது.இது நிலையில், பாஜக எம்.பி மேனகா காந்தி, எல்விஷ் யாதவ் வீடியோவில் சொல்வதுபோல் எந்த குற்றமும் செய்யவில்லை என்றால் எதற்காக அவர் ஓடி ஒளிகிறார் என்றும் இதன் பின்னணியில் பெரிய சதி கும்பல் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

பார்ட்டிகளில் போதைக்காக பாம்பு விஷம் : சிக்கிய பிக்பாஸ் வெற்றியாளர் - வெளிவந்த பாஜக பின்புலம் !

இந்த நிலையில், எல்விஷ் யாதவ், பாஜக தலைவர்களுடன் இருக்கும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இவர் பாஜக கொடி வைத்த காரில் வந்து இறங்கியது குறித்த புகைப்படமும், பிக்பாஸில் இருந்த இவருக்கு ஆதரவாக பாஜகவினர் ஓட்டு கேட்டது குறித்த செய்திகளும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.அதோடு இவர் ஒன்றிய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ஸ்மிருதி இரானி, பாஜக ஆளும் அரியான மாநில முதலமைச்சர் மனோகர் உள்ளிட்ட பாஜக தலைவர்களுடன் இருக்கும் புகைப்படங்கள் வைர்லாகி பலரும் பலவித கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

(Visited 8 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே