பொழுதுபோக்கு

“தலைவர் 171” படத்தின் கதையை விஜய்க்கு கூறிய லோகேஷ்.. விஜய் என்ன சொன்னார் தெரியுமா?

மாநகரம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ் அடுத்தடுத்து இயக்கிய படங்கள் அத்தனையுமே ஹிட்டடித்திருக்கின்றன. கடைசியாக அவர் இயக்கத்தில் வெளியான விக்ரம் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகி அவரது கிராஃபை உச்சத்துக்கு கொண்டு சென்றது.

விக்ரம் படம் கொடுத்த கிரேஸால் அவரது இயக்கத்தில் நடிப்பதற்கு நடிகர்கள் வெயிட் பண்ணவும் ஆரம்பித்திருக்கிறார்கள்.

அவர் ஐந்தாவது படமாக லியோ படத்தை இயக்கியிருக்கிறார். அக்டோபர் 19ஆம் தேதி படம் ரிலீஸாகிறது. படத்துக்கான டிக்கெட் ப்ரீ புக்கிங் விரைவில் ஆரம்பிக்கவுள்ளது.

கண்டிப்பாக இந்தப் படமும் விக்ரம் படம் போலவே மெகா ஹிட்டடிக்கும் என்று திரைத்துறையில் ஒரு பேச்சு எழுந்திருக்கிறது.

லியோ படத்துக்கு பிறகு அவர் கைதி 2வை இயக்குவதாக இருந்தது. ஆனால் அதற்கு முன்னதாக ரஜினிகாந்த்துடன் ஒரு படத்தில் இணைகிறார் லோகேஷ்.

தலைவ 171 என்று தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டிருக்கும் அந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

See also  மகள் பற்றி கேட்ட கேள்வி... கோபத்துடன் ஐஸ்வர்யா ராய் கொடுத்த பதில்

விஜய் ரியாக்‌ஷன் இந்நிலையில் தலைவர் 171 படத்தின் கதையை லோகேஷ் விஜய்யிடம் கூறியபோது அதற்கு விஜய் கொடுத்த ரியாக்‌ஷன் குறித்து தெரியவந்திருக்கிறது.

கதையை கேட்டு முடித்தவுடன் லோகேஷ் கனகராஜிடம் விஜய், “10 நிமிடங்களில் ஒரு கதை எனக்கு இவ்வளவு பிடித்துப்போனதே இல்லை. சூப்பர்” என்று கூறியதாக லோகேஷ் ஒரு பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.

லோகேஷ் கனகராஜ் முதன்முறையாக ரஜினியுடன் இணைந்திருப்பதால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்க எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மேலும் இந்தியாவிலேயே பிரமாண்ட படமாகவும் இது இருக்க வாய்ப்பிருப்பதாக கோடம்பாக்கத்தில் பலமாகவே பேச்சுக்கள் எழுந்திருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

(Visited 1 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content