இலங்கை

குருந்தூர் மலையில் குவிந்த சிங்களவர்களால் பதற்றமான சூழல் ஏற்படும் அபாயம்

குருந்தூர் மலையில் குவிந்த சிங்களவர்களால் பதற்றமான சூழல் ஒன்று ஏற்பட்டுள்ளது.

முல்லைத்தீவு – குருந்தூர்மலையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட காரையில் வழிபாடுகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

500க்கும் மேற்பட்ட சிங்கள மக்கள் மற்றும் புத்த பிக்குகள் இணைந்து அங்கு வழிபாடுகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலய பொங்கல் நிகழ்வு இடம்பெறவுள்ள சிங்கள மக்கள் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்றைய பொங்கல் நிகழ்வுகளில் குழப்பங்கள் ஏற்படலாம் என்பதன் அடிப்படையில், 3 பேருந்துகள், 2 இராணுவ வாகனங்களில் நூற்றுக்கணக்கான பொலிஸார், விசேட அதிரடிப் படையினர் பாதுகாப்பு கடமைகளுக்காக அழைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, தமிழ் மக்களும் பொங்கல் நிகழ்விற்காக வருகை தந்தவண்ணம் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்