இலங்கை

இலங்கையில் சுற்றிவளைக்கப்பட்ட 6 விபச்சார விடுதிகள்!

மாலம்பே,  கடுவலை மற்றும் தலங்கம பிரதேசங்களில் ஆயுர்வேத மசாஜ் நிலையங்கள் எனும் போர்வையில் இயங்கி வந்த 6 விபசார விடுதிகள் சுற்றிவளைக்கப்பட்டுள்ளன.

குறித்த விடுதிகளில் இருந்த 31 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக   பாணந்துறை வலன மத்திய ஊழல் ஒழிப்பு செயலணி தெரிவித்துள்ளது.

இரவு நேரங்களில் திறக்கப்படும் குறித்த நிலையங்கள் தொடர்பில் பாணந்துறை வலன மத்திய ஊழல் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சுற்றுவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது ஆறு பொலிஸ் குழுக்கள் கடமையில் ஈடுப்படுத்தப்பட்டதோடு குறித்த நிலையங்கள் விபசார நிலையம் என உறுதிப்படுத்திய பின்னரே இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட பெண்களில் பெரும்பான்மையானவர்கள் தூர பிரதேசங்களில் வசிப்பவர்கள் எனவும் பொருளாதார நெருக்கடி காரணமாக கொழும்பில் வேலைக்கு வந்து அதிக வருமானம் ஈட்டுவதற்காக இரவு வேளைகளில் இந்த நிலையத்தில் வேலை செய்து வந்ததாகவும் தெரியவந்துள்ளது.

(Visited 18 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!