பிரிட்டன் நீதிமன்ற தீர்ப்பை விமர்சிக்கும் ஹமாஸ் அமைப்பு!
பிரிட்டனில் Palestine Action அமைப்புக்கு எதிராக விதிக்கப்பட்ட தடையை மேல்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்துள்ள நிலையில், ஹமாஸ் அமைப்பு கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.
” இது சியோனிச (இஸ்ரேலிய) குழுக்களின் அழுத்தத்தின் கீழ் எடுக்கப்பட்ட ஓர் அரசியல் உள்நோக்கம் கொண்ட முடிவாகும்” என ஹமாஸ் அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.
இது குறித்து ஹமாஸ் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“காஸாவில் இஸ்ரேலிய இராணுவத்தால் அரங்கேற்றப்படும் இனப்படுகொலையைக் கண்டிக்கும் எந்தவொரு நடவடிக்கையையும் ஒடுக்குவதும், அச்சுறுத்துவதுமே இந்த முடிவின் நோக்கமாகும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசியல் உள்நோக்கம் கொண்ட இந்தத் தடையானது, பலஸ்தீன உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பவர்களின் குரல்களை ஒடுக்குவதற்கு எடுக்கப்பட்ட ஒரு அவநம்பிக்கையான முயற்சியாகும் என்றும் ஹமாஸ்
அமைப்பு மேலும் கூறியுள்ளது.
Palestine Action அமைப்பை “பயங்கரவாத” அமைப்பாகப் பிரகடனப்படுத்தி அரசாங்கம் விதித்த தடை சட்டப்பூர்வமானது என்று மேல்முறையீட்டு நீதிமன்றம் திங்கட்கிழமை தீர்ப்பளித்தது.
இதன் மூலம் கீழ் நீதிமன்றம் ஒன்று வழங்கியிருந்த தீர்ப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.




