உலகம்

“, அது நடந்திருக்கக்கூடாது” : இஸ்ரேலுக்கு கடும் எச்சரிக்கை!

லெபனான் மீது இஸ்ரேல் இன்று முன்னெடுத்த தாக்குதல்களை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கண்டித்துள்ளதுடன், அது நடந்திருக்கக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், ஈரானுடனான தற்போதைய அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு இடையூறு விளைவிக்க வேண்டாம் என்று இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை அவர் வலியுறுத்தினார்.

வடக்கு இஸ்ரேலில் உள்ள சமூகங்களை நோக்கி ஹிஸ்புல்லா குழு மூன்று எறிகணைகளை வீசியதற்குப் பதிலடியாகவே பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதிகளில் உள்ள ஹிஸ்புல்லாவின் உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேலிய இராணுவம் கூறியது.

ஹிஸ்புல்லாவின் இந்தத் தாக்குதல்களை “மிகச் சிறிய மற்றும் அர்த்தமற்றவை” என்று வர்ணித்த ட்ரம்ப், அவை முக்கியமான அமைதி செயல்முறையை சீர்குலைக்கக் கூடாது என்றும் வலியுறுத்தினார்.

ஈரானின் போர் நிறுத்த கோரிக்கைகளில் லெபானில் தாக்குதல் நிறுத்தப்பட வேண்டும் என்பதும் ஒன்றாகும். இன்றைய தினம் அமெரிக்கா – ஈரான் இடையில் ஒரு ஒப்பந்தம் எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதனை முறியடிக்கும் வகையில் இஸ்ரேல் புதிய தாக்குதல்களை கட்டவிழ்த்துவிட்டுள்ளது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்