ஐரோப்பா

சுவிஸ் மக்கள் தொகையை 10 மில்லியனாக வரையறுக்க முன்மொழிவு!

சுவிட்சர்லாந்து தனது நாட்டு மக்கள் தொகையை 10 மில்லியனாக நிர்ணயிக்கும் சர்ச்சைக்குரிய வாக்கெடுப்பை நாளைய தினம் நடத்தவுள்ளது.

இந்த திட்டத்தை   வலதுசாரி சுவிஸ் மக்கள் கட்சி ஆதரிக்கிறது. வீட்டுவசதி, பொதுச் சேவைகள் மற்றும் சுற்றுச்சூழல் மீதான அழுத்தத்தைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு “நிலைத்தன்மை முயற்சி” என்று அக்கட்சி விவரித்துள்ளது..

ஏனைய அனைத்து கட்சிகளும் இதனை ஒரு குழப்பகரமான முடிவு என விமர்சித்துள்ளனர்.

அதேநேரம் இந்த முன்மொழிவானது ஐரோப்பிய ஒன்றியத்துடன் கடின உழைப்பால் பெறப்பட்ட உறவுகளைச் சேதப்படுத்தும் என்றும்,   உலகில் தனிமைப்படுத்திவிடும் என்றும் குறிப்பிடடுள்ளன.

2002-ல் 7.3 மில்லியனாக இருந்த சுவிட்சர்லாந்தின் மக்கள் தொகை, தற்போது 9.1 மில்லியனாக உள்ளது. அவர்களில் 27% பேர் வெளிநாட்டு குடியிருப்பாளர்களாவர்.

நெரிசலான ரயில்கள், விலையுயர்ந்த குடியிருப்புகள் மற்றும் அதிகரித்து வரும் சுகாதாரச் செலவுகள் குறித்து பல வாக்காளர்கள் கவலை கொண்டுள்ள நிலையில் இந்த சர்ச்சைக்குரிய முன்மொழிவு விவாதத்திற்கு வந்துள்ளது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்