உலகம் செய்தி

இன அழிப்பு: சர்வதேச மன்னிப்பு சபை அறிக்கையை வரவேற்கிறது ஹமாஸ்!

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரையில் இஸ்ரேல் முன்னெடுக்கும் இனச் சுத்திகரிப்பு நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்து சர்வதேச மன்னிப்புச்சபை வெளியிட்ட அறிக்கையை ஹமாஸ் அமைப்பு வரவேற்றுள்ளது.

குடியேறிகளின் வன்முறை என்பது தற்செயலான நிகழ்வு அல்ல, மாறாக அது இஸ்ரேலிய அரசாங்கத்தால் திட்டமிட்டு நடத்தப்படும் ஒரு முறையான தாக்குதல் என்று ஹமாஸ் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த அத்துமீறல்கள் சர்வதேச சட்டங்களை வெளிப்படையாக மீறுவதாகவும், உலக நாடுகளின் மௌனம் இஸ்ரேலின் குற்றங்களுக்குத் துணையாக இருப்பதாகவும் சர்வதேச மன்னிப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் மேற்படி அறிக்கையின் கண்டுபிடிப்புகளை அங்கீகரிப்பதோடு மட்டுமல்லாமல், இஸ்ரேலிய தலைவர்களுக்கு எதிராகச் சர்வதேச சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் ஹமாஸ் வலியுறுத்துகிறது.

பாலஸ்தீனத்தில் செயல்படும் ஹமாஸ் அமைப்பு, ஈரான் ஆதரவு பெற்ற குழுவாகும்.

 

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி