கடுமையான விலையை கொடுக்க நேரிடும்: ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை!
ஈரான் தனது செயல்களுக்குக் கடுமையான விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
“ஈரான் அமைதி உடன்படிக்கைக்கான பேச்சுவார்த்தைக்குப் போதிய கால அவகாசம் எடுத்தும் உடன்படவில்லை.
தற்போது அவர்கள் இதற்குரிய விலையைத் தந்துதான் ஆக வேண்டும்.
ஈரானிய ராணுவம் முற்றிலும் சீர்குலைந்துள்ளது. அவர்களின் கடற்படை மற்றும் விமானப்படையின் பெரும்பகுதி இப்போது இல்லவே இல்லை; அவர்கள் முற்றிலும் தோற்கடிக்கப்பட்டுள்ளனர். ஈரான் வெறும் பேச்சோடு சரி, செயலில் ஒன்றும் இல்லை” எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் பாலங்களை இலக்கு வைக்கப்படும் என அமெரிக்க தரப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.





