‘இலங்கை எதிர்கொள்ளும் சவால்கள்’ – அமெரிக்க தூதுக்குழுவுடன் சஜித் ஆராய்வு!
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அமெரிக்க House Democracy Partnership (HDP) தூதுக்குழுவினருக்கு இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று நடைபெற்றது.
நாடாளுமன்றத்திலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பின்போது, இரு தரப்பினரிடையேயான நாடாளுமன்ற ஒத்துழைப்பு,
ஜனநாயக ஆட்சி, சட்டவாக்க செயல்முறைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டன.
அத்துடன், இலங்கை மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கிடையில் நீண்டகாலமாக நிலவிவரும் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.
அரச கொள்கை அபிவிருத்தியாக்கம் மற்றும் இலங்கை எதிர்கொள்ளும் சமகால அரசியல் மற்றும் பொருளாதார சவால்கள் தொடர்பிலும் இரு தரப்பினரிடையே விரிவான கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றுள்ளது.
இச்சந்திப்பில், ஐக்கிய அமெரிக்க குடியரசு தூதுக்குழுவை பிரதிநிதித்துவப்படுத்தி, மேகன் மூர் (HDP), மேகன் கரோல் (Congressional Budget Office), கிறிஸ்டி ஹோலி அந்தனி (Congressional Budget Office), ஜேன் ஹேவெல் (Charge d’ Affairs,U.S.Embassy in Sri Lanka), ஆடம் மிச்செலோ (Political Officer U.S.Embassy in Sri Lanka), சதுரி திஸாநாயக்க (Political Specialist U.S.Embassy in Sri Lanka), மற்றும் ஆரன் யோஸ்ட் (Political Fellow, U.S.Embassy in Sri Lanka) ஆகியோர் கலந்து கொண்டனர்.






