உலகம் ஐரோப்பா செய்தி

அமெரிக்க துணை ஜனாதிபதியின் கருத்துக்கு பிரிட்டன் கடும் கண்டனம்!

மாணவர் Henry Nowak கொல்லப்பட்ட சம்பவத்தை மையப்படுத்தி , அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் பிரிட்டன் குடியேற்றக் கொள்கைகளை விமர்சித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வான்ஸின் கருத்துக்கள் சமூகத்தில் பிளவை உண்டாக்கும் முயற்சி என சுட்டிக்காட்டியுள்ள பிரித்தானிய அரசு, வெளிநாட்டு அரசியல்வாதிகளின் தலையீட்டை வன்மையாகக் கண்டித்துள்ளது.

கடந்த வருடம் டிசம்பர் 3-ஆம் திகதி, Southampton பகுதியில் நண்பர்களுடன் இரவு நேரப் பொழுதுபோக்கை முடித்துவிட்டுத் தனியாக வீடு திரும்பிக் கொண்டிருந்த ஹென்றி நோவாக் என்ற மாணவன், Vickrum Digwa என்ற நபரால் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார்.

இந்தக் கொலை விவகாரம் குறித்து எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டிருந்த அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி.வென்ஸ்,

“அந்நிய குடியேற்றவாசிகளின் பெருமளவிலான ஊடுருவலே இந்த மாணவனின் மரணத்திற்குக் காரணம்” எனக் குற்றம் சாட்டியிருந்தார்.

ஜே.டி.வென்ஸின் இந்தப் பதிவுக்கு பதிலடி கொடுத்துள்ள டவுனிங் ஸ்ட்ரீட் ஊடகப் பேச்சாளர்,

” ஹென்றி நோவாக்கின் குடும்பத்தினர், தங்களது பிள்ளையின் மரணத்தை ஒரு பிரிவினையை ஏற்படுத்துவதற்காகப் பயன்படுத்த வேண்டாம் என்று தெளிவாகக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மிக மோசமான சூழ்நிலையிலும் எமது அரசியல் மக்களை ஒன்றிணைப்பதாக இருக்க வேண்டுமே தவிர, பிரிப்பதாக இருக்கக் கூடாது. அதுதான் எமது நாட்டின் பண்பு” என்று தெரிவித்துள்ளார்.

இந்தக் கொலை வழக்கு குற்றவாளி பிரித்தானியாவில் பிறந்தவர் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், வான்ஸின் தவறான புரிதல் நச்சுத்தன்மை வாய்ந்த அரசியலாகப் பார்க்கப்படுகிறது.

ஜே.டி.வென்ஸின் கருத்துகள் பெரும்பாலும் அமெரிக்க உள்நாட்டு வாக்காளர்களைக் கவரும் நோக்கில் அமைந்துள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

ஏனெனில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது இரண்டாவது பதவிக்காலத்தில், சட்டவிரோதக் குடியேற்றவாசிகளைப் பெருமளவில் நாட்டை விட்டு வெளியேற்றுவதை ஒரு முக்கிய இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி