நாவலப்பிட்டியவில் சோகம் : முச்சக்கரவண்டி மீது மரம் விழுந்து விபத்து – மூவர் பலி!
நாவலப்பிட்டிய -மாபகந்த பகுதியில் மரம் ஒன்று முச்சக்கரவண்டி மீது விழுந்ததில் பாடசாலை மாணவன் உட்பட மூவர் பலியாகியுள்ளனர்.
குறித்த விபத்த இன்று காலை இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர்களில் பாடசாலை மாணவர் ஒருவர், அவருடைய தாய் மற்றும் மற்றொரு பெண் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
முச்சக்கர வண்டி ஓட்டுநர் விபத்தில் இருந்து உயிர் தப்பியுள்ளார்.
பிரதேசவாசிகளின் உதவியுடன் குறித்த மரம் அகற்றப்பட்டு உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
இதேவேளை குறித்த மரம் சில காலமாக அழுகிய நிலையில் இருந்ததாகவும், அதை அகற்றுமாறு அதிகாரிகளுக்கு முன்னரே தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
நவலப்பிட்டிய போலீசார் இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




