செய்தி வணிகம்

‘Lynas’ நிறுவனத்தின் இடைக்கால CEOவாக Pol Le Roux நியமனம்!

ஆஸ்திரேலியாவின் முன்னணி நிறுவனமான Lynas Rare Earths , தனது நிறுவனத்தின் இடைக்கால தலைமை நிர்வாக அதிகாரியாக Pol Le Roux எதிர்வரும் 30 ஆம் திகதி பொறுப்பேற்பார் என்று இன்று அறிவித்தது.

சீனாவுக்கு வெளியே உலகின் மிகப்பெரிய அரிய வகை மண் தாதுக்களை உற்பத்தி செய்யும் மேற்படி நிறுவனத்தில், தலைமைப் பதவி மாற்றம் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

கடந்த 12 ஆண்டுகளாக நிறுவனத்தை வெற்றிகரமாக வழிநடத்தி, தற்போது ஓய்வு பெறவுள்ள manda Lacaze இன் இடத்துக்கே Pol Le Roux நியமிக்கப்பட்டுள்ளார்.

Pol Le Roux கடந்த 2010 ஆம் ஆண்டின் இறுதியில் Lynas நிறுவனத்தில் இணைந்தார்.

அமேண்டா லாகேஸ் நிறுவனத்தில் இணைவதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பிருந்தே செயல்பட்டு வரும் இவர், ஆஸ்திரேலியா மற்றும் மலேசியா முழுவதும் உள்ள லைனாஸ் நிறுவனத்தின் உற்பத்தி மற்றும் செயல்பாடுகளை மிகச் சிறந்த முறையில் மேற்பார்வையிட்டு வந்துள்ளார்.

இதற்கு முன்னதாக, அவர் பிரெஞ்சு இரசாயன நிறுவனமான (Rhône-Poulenc இல் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!