ஐரோப்பா

பிரித்தானிய பாடசாலைகளில் வெப்பநிலை வரம்புகளை நிறுவது தொடர்பில் பரிசீலனை!

பிரித்தானியாவில் மே மாதத்தில் கடுமையான வெப்பநிலை பதிவாகியதை தொடர்ந்து பாடசாலைகளில் வெப்பநிலை வரம்புகளை நிறுவது தொடர்பில்  கல்வித்துறை செயலாளர் பிரிட்ஜெட் பிலிப்சன் ( Bridget Phillipson) ஆராய்ந்து வருவதாக கூறப்படுகிறது.

ஸ்கொட்லாந்து உள்ளிட்ட சில பகுதிகளில் வெப்பநிலையானது 35°C கடந்தது. அத்துடன் எல்நினோ மாற்றங்களால் உச்சபட்ச வெப்பநிலை பதிவாகும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்தே இதற்கான பரிசீலனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையே NEU போன்ற ஆசிரியர் சங்கங்கள், கற்றல், தேர்வு காலங்கள் மற்றும் ஊழியர்கள், குழந்தைகளின் நல்வாழ்வைப் பாதுகாக்க அழைப்பு விடுத்துள்ளன.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள பிரிட்ஜெட் பிலிப்சன்,  கடுமையான வெப்பநிலை கற்பித்தலையும் கற்றலையும் கடினமாக்குகிறது என்பதை  ஒப்புக்கொண்டார்.

மேலும், பாடசாலைகளின் தேவைகளை அரசாங்கம் உன்னிப்பாக ஆராய்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!