இலங்கை செய்தி

கோட்டாபயவுக்கு பயணத் தடை விதிப்பு!

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் இரு இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக வெளிநாட்டுப் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான வழக்கு விசாரணையிலேயே மேற்படி தடை விதிக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான வழக்கு, இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள், சந்தேக நபர்களுக்கு எதிராக பயணக் கட்டுப்பாடுகளை விதிக்குமாறு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.

குறித்த மனுவைப் பரிசீலித்த நீதிவான் பசன் அமரசேன, பயணத் தடைகளை விதித்து உத்தரவிட்டார்.

முன்னாள் இராணுவ அதிகாரியான கேணல் முகமட் அன்சார் மற்றும் முன்னாள் புலனாய்வு அதிகாரி பிரேமானந்த உடலகம ஆகியோருக்கும் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!