ஈரான் மிகப்பெரிய விலையை கொடுக்க நேரிடும்: Netanyahu எச்சரிக்கை!
இஸ்ரேலுக்கு எதிராக சதி செய்யும் எதிரிகள் அதற்காக மிகப்பெரிய விலையை கொடுக்க நேரிடும் என்று இஸ்ரேல் பிரதமர் Benjamin Netanyahu எச்சரித்துள்ளார்.
இஸ்ரேலிய உளவு அமைப்பான மொசாட் பிரிவின் தலைவராக பணியாற்றிய David Barnea வின் பணிநிறைவு விழாவில் உரையாற்றுகையிலேயே பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இந்த எச்சரிக்கையை விடுத்தார்.
ஈரான் நாட்டின் தற்போதைய ஆட்சி நிலைகுலைந்து வருவதாகவும், அந்த அரசாங்கம் விரைவில் வீழ்ச்சியடையும் என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, கடந்த ஐந்து ஆண்டுகளில் மொசாட் தலைவர் செய்த பாதுகாப்பு சாதனைகளைப் பாராட்டிய Benjamin Netanyahu , அவருக்குப் பதிலாக மேஜர் ஜெனரல் Roman Gofman புதிய தலைவராகப் பொறுப்பேற்பார் என்பதையும் உறுதிப்படுத்தினார்.




