உலகம் செய்தி

உக்ரைன்மீது ரஷ்யா மிகப்பெரிய தாக்குதல்: 14 பேர் பலி!

உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய மிகப்பொரிய வான்வழித் தாக்குதலில் குறைந்தது 14 பேர் பலியாகியுள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

தலைநகர் கிவ் மற்றும் டினிப்ரோ ஆகிய நகரங்களில் உள்ள குடியிருப்புகள் மீது ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

உக்ரைன் முன்னதாக நடத்திய தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

உக்ரைன் ஜனாதிபதி செலென்ஸ்கி இந்தத் தாக்குதலை உறுதிப்படுத்தியதுடன், மக்கள் பாதுகாப்பு எச்சரிக்கைகளை பின்பற்றுமாறு வலியுறுத்தியுள்ளார்.

இடிபாடுகளுக்கு இடையே சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் அவசரக்காலக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்தத் தாக்குதலானது இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் போர் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!