ஐரோப்பா

ஜெர்மனியில் அதிகரித்து வரும் வன்முறை சம்பவங்கள் : ரயில் நிலையங்களே குறி!

ஜெர்மனியின் ரயில் நிலையங்களில் வன்முறைகள் அதிகரித்துள்ளதால் ஊழியர்கள் மற்றும் பயணிகள் பாதுகாப்பாக உணரவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.

மற்ற இடங்களை விட  ரயில் நிலையத்தில் அதிகளவிலான வன்முறை நிகழ்வதாக குற்றவியல் நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக ஃபிராங்க்பர்ட் (Frankfurt) ரயில் நிலையத்தில் பிக்பாக்கெட் திருடர்கள் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல் ரயில் நிலையத்தை விட்டு வெளியேறும் பயணிகள், அதன் அண்டைப்பகுதிகளில் போதைப் பொருள் பாவனையாளர்களின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பொதுவாக காவல்துறையினர் சம்பவ இடத்தில் இருப்பார்கள், ஆனால் சமீபத்திய ஆண்டுகளில் வெளியிலிருந்து பார்க்கும்போது பெரிய மாற்றம் எதுவும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை என்றும் அந்த அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், ஜெர்மனியின் ரயில் நிலையங்களில் நடக்கும் வன்முறை குறித்த புள்ளிவிவரங்கள் பல அதிகாரிகளுக்குத் தலைவலியை ஏற்படுத்துகின்றன.

குறிப்பாக கடந்த லைப்சிக் (Leipzig) மத்திய நிலையத்தில் 859 வன்முறைக் குற்றங்களும், டார்ட்மண்ட் (Dortmund) மத்திய நிலையத்தில் 735 குற்றங்களும், பெர்லின்  (Dortmund) மத்திய நிலையத்தில் 654 குற்றங்களும் பதிவாகியுள்ளன.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!