உலகம்

ஈரானுக்கும் – சீனாவுக்கும் இடையில் ஆயுதங்கள் கைமாறியதா?

மத்தியக் கிழக்கில் இடம்பெறும் மோதலில் அமெரிக்காவின் போர் விமானம் ஒன்றை ((F-15E ஸ்ட்ரைக் ஈகிள்) ஈரானிய படையினர் சுட்டு வீழ்த்தினர்.

இந்த விமானத்தை சுட்டு வீழ்த்த சீனாவின் ஏவுகணை பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று புதிய தகவல் கசிந்துள்ளது.

ஈரான் பயன்படுத்திய குறித்த ஏவுகணை  தோளில் வைத்து பயன்படுத்தப்படும் சிறந்த ஏவுகணையாக கருதப்படுகிறது.

இந்த வகை ஏவுகணைகள், முறையாக மனிதனால் எடுத்துச் செல்லக்கூடிய வான் பாதுகாப்பு ஆயுதங்கள் அல்லது மேன்பேட்கள் என்று அழைக்கப்படுகின்றன.

இவை சுமார் ஏழு அடி நீளமும், 40 பவுண்டுகள் எடையும் கொண்டவை. தாழ்வாகப் பறக்கும் விமானங்களை வீழ்த்துவதற்கு இவை ஒப்பீட்டளவில் மலிவான மற்றும் பயனுள்ள ஒரு வழியாகும்.

இதற்கமைய அமெரிக்காவின் அதிகாரி ஒருவர், ஸ்டெல்த் விமானங்களைக் கண்டறியும் திறன் கொண்ட நீண்ட தூர முன் எச்சரிக்கை ரேடார் அமைப்பையும் சீனா ஈரானுக்கு வழங்கியிருக்கலாம் என நம்புவதாக NBC செய்தி வெளியிட்டுள்ளது.

இவ்விரு ஆயுதங்களும் எப்போது ஈரானுக்கு கைமாற்றப்பட்டன என்ற தகவல் வெளியாகவில்லை.

இருப்பினும் இந்த நடவடிக்கை சீனா மற்றும் அமெரிக்கா இடையிலான இராஜதந்திர உறவை சிக்கலாக்குவதாக செய்தி வெளியாகியுள்ளது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!