கடுமையான இஸ்ரேலிய கட்டுப்பாடுகளையும் மீறி அல்-அக்ஸாவில் 60,000 பலஸ்தீனியர்கள் தொழுகை
இஸ்ரேலிய பாதுகாப்பு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டிருந்தபோதிலும், சுமார் 60,000 பலஸ்தீனியர்கள் வெள்ளிக்கிழமை அல்-அக்ஸா மசூதியில் தொழுகையில் கலந்துகொண்டனர்.
ஜெருசலேமின் பழைய நகரம் மற்றும் மசூதி வளாக நுழைவாயில்களில் இஸ்ரேலியப் படைகள் கடுமையான கட்டுப்பாடுகளை அமுல்படுத்தியிருந்ததாக இஸ்லாமிய வக்ஃப் துறை தெரிவித்துள்ளது. அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான வழிபாட்டாளர்கள் மசூதி முற்றங்களுக்கு வரத் தொடங்கினர்.
பழைய நகரம் முழுவதும் பாதுகாப்புப் படைகள் குவிக்கப்பட்டதுடன், மசூதி வாயில்கள் மற்றும் ஜெருசலேம் சுற்றியுள்ள சோதனைச் சாவடிகளில் கூடுதல் கண்காணிப்பும் மேற்கொள்ளப்பட்டது. வழிபாட்டாளர்களின் அடையாள அட்டைகள் சரிபார்க்கப்பட்டதுடன், பலர் சோதனைக்கும் உட்படுத்தப்பட்டனர்.
குறிப்பாக வெள்ளிக்கிழமைகள் மற்றும் முக்கிய மத நிகழ்வுகளின் போது அல்-அக்ஸா மசூதிக்கான அணுகல் மீண்டும் மீண்டும் கட்டுப்படுத்தப்படுவதாக பலஸ்தீனியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதனிடையே அனைத்து தடைகளையும் மீறி மசூதியில் தொடர்ந்து தொழுகையில் ஈடுபட வேண்டும் என ஜெருசலேம் வாழ் மக்கள் மற்றும் பலஸ்தீனிய அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.




