“ஏனைய கட்சிகளை உடைக்கும் எண்ணம் இல்லை” – நாமல்
” ஏனைய கட்சிகளை உடைத்து, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை வலுப்படுத்தும் திட்டம் எதுவும் இல்லை.” என்று அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்களை, மொட்டு கட்சியுடன் இணைத்து, எதிர்க்கட்சி தலைவர் ஆகும் திட்டம் உள்ளதா என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே நாமல் ராஜபக்ச இவ்வாறு கூறியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு,
” ஒரு கட்சியை உடைத்து, எமது கட்சியை வலுப்படுத்துவதற்குரிய திட்டம் இல்லை. அவ்வாறு செயற்பட்டதால் கடந்த காலங்களில் துன்பங்களை எதிர்கொள்ள நேரிட்டது. வாக்கு வங்கி 3 சதவீதமாக சரிந்தது.
எனினும், எமது கட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கை இடம்பெறும். அடுத்த ஜனாதிபதி யார் என்பதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.’ – என்றார்.





