இலங்கை செய்தி

ஹோர்முஸ் பதற்றம் – ஜெட் எரிபொருள் நெருக்கடி அபாயம் என ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை

ஹோர்முஸில் தொடரும் பதற்றம் காரணமாக, வரும் வாரங்களில் ஜெட் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் இருப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் எச்சரித்துள்ளது.

ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து இடையூறுகள் நீடித்தால், ஐரோப்பிய ஒன்றியத்தில் ஜெட் எரிபொருள் சந்தை மேலும் கடுமையாக பாதிக்கப்படும் என்று ஐரோப்பிய ஆணையத்தின் எரிசக்தித் துறை தெரிவித்துள்ளது.

கச்சா எண்ணெய் மற்றும் பிற பெட்ரோலியப் பொருட்களின் விலை ஏற்றத் தாழ்வுகள் அனைத்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளையும் பாதித்துள்ளன. இருப்பினும், தற்போது வரை பொதுமக்கள் பயன்பாட்டில் நேரடி எரிபொருள் விநியோகத் தடை ஏற்படவில்லை என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ஆனால், அடுத்த சில வாரங்களிலும் நிலைமை சீராகாத பட்சத்தில், குறிப்பாக விமானப் போக்குவரத்துக்குத் தேவையான ஜெட் எரிபொருள் சந்தையில் கடும் நெருக்கடி உருவாகும் அபாயம் இருப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் எச்சரித்துள்ளது.

Sainth

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!