உலகம் செய்தி

மீண்டும் போர் தொடுக்க வேண்டாம்- அமெரிக்கா, ஈரானுக்கு ரஷ்யா அழைப்பு

அமெரிக்காவும் ஈரானும் மீண்டும் இராணுவ மோதலுக்குள் செல்லாமல், தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று ரஷ்யா வலியுறுத்தியுள்ளது.

ஈரானிலிருந்து செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அகற்ற உதவ ரஷ்யா தயாராக இருப்பதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜகரோவா  தெரிவித்தார். ஆனால், இதுதொடர்பாக மாஸ்கோ தனது யோசனைகளை யார்மீதும் திணிக்கவில்லை என்றும் அவர்  கூறினார்.

மறுபுறம், ஈரான் தனது அதிக செறிவூட்டப்பட்ட யுரேனிய கையிருப்பை வைத்திருக்க அமெரிக்கா அனுமதிக்காது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

தற்போது ஈரானிடம் 60 சதவீதம் வரை செறிவூட்டப்பட்ட சுமார் 440 கிலோ யுரேனியம் இருப்பதாக நம்பப்படுகிறது. இந்த யுரேனிய கையிருப்பின் எதிர்காலம், அமெரிக்கா – ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தைகளில் முக்கிய சர்ச்சை அம்சமாக தொடர்ந்து நீடித்து வருகிறது.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!