இலங்கை

தினமும் 99 புற்றுநோயாளிகள் அடையாளம்! இலங்கையில் மும்மடங்காக அதிகரிப்பு!

கடந்த 20 ஆண்டுகளில் நாட்டில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை மும்மடங்காக அதிகரித்துள்ளதாக  சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர்.

2022 ஆம் ஆண்டு தரவுகளின்படி, நாட்டில் 35,855 புற்றுநோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், தினமும்  99 புதிய புற்றுநோயாளிகள் இனங்காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள  மருத்துவ நிபுணர் ஹசரேலி பெர்னாண்டோ, “கடந்த 20 ஆண்டுகளின் தரவுகளை நாம் பார்த்தால், எண்ணிக்கையில் மும்மடங்கு அதிகரிப்பைக் காண்கிறோம்.

புற்றுநோய் குறித்த பொதுமக்களிடையே அதிகரித்த விழிப்புணர்வு, முன்கூட்டியே கண்டறிதல் மற்றும் பிற கண்டறிதல் ஆராய்ச்சிகள் காரணமாகப் பதிவுகள் அதிகரித்ததையும் இந்த எண்ணிக்கை அதிகரிப்பிற்கான காரணங்களாக நாங்கள் கருதுகிறோம்.

2022 ஆம் ஆண்டின் இலங்கை தேசிய புற்றுநோய் பதிவேட்டின் தரவுகளின்படி, 35,855 புதிய புற்றுநோயாளிகள் பதிவாகியுள்ளனர். இவர்களில், 16,398 ஆண்களும், 19,457 பெண்களும் அடங்குவர்” எனத் தெரிவித்துள்ளார்.

 

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!