உலகம் செய்தி

20 விமான நிலையங்களை மீளக் கட்டியெழுப்பியது ஈரான்!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களால் சேதமடைந்த ஈரானின் Tabriz சர்வதேச விமான நிலையம் (Tabriz International Airport) மீண்டும் இயங்க ஆரம்பித்துள்ளது.

ஈரானின் நிபுணர்களால் மேற்கொள்ளப்பட்ட சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், புதன்கிழமை முதல் விமான போக்குவரத்து மீண்டும் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையில் தற்காலிக போர் நிறுத்தம் அமுலுக்கு வந்த பிறகு ஈரானில் இயல்பு நிலைக்குத் திரும்பிய 20 ஆவது விமான நிலையமாக இது கருதப்படுகின்றது.

ஈரானின் சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பு மற்றும் அரச ஊடகம் என்பன மேற்படி தகவலை உறுதிப்படுத்தியுள்ளன.

அதேவேளை, சேதமடைந்த கட்டிடங்களை புனரமைக்கும் பணிகளும் ஈரானில் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

ஈரான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையிலான தற்காலிக போர் நிறுத்தத்தை பயன்படுத்தி நிரந்தர அமைதியை ஏற்படுத்துவதற்குரிய இராஜதந்திர முயற்சியில் மத்தியஸ்த நாடாக செயல்படும் பாகிஸ்தான் ஈடுபட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!