அரசியல் இலங்கை செய்தி

மாகாணசபைத் தேர்தலை வென்றெடுக்க ‘கூட்டு அரசியல் சமர்’ முன்னெடுப்பு!

மாகாணசபைத் தேர்தலை இவ்வருட இறுதிக்குள் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு எதிரணிகள் வலியுறுத்தியுள்ளன.

கொழும்பில் இன்று நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பின்போதே எதிரணி தலைவர்கள் ஒன்றிணைந்து இந்த வலியுறுத்தலை விடுத்தனர்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ. சுமந்திரன், ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன, முன்னாள் சபாநாயகர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன, முன்னாள் அமைச்சர்களான ஜி.எல். பீரிஸ், நிமல் சிறிபாலடி சில்வா, ராஜித சேனாரத்ன உள்ளிட்டவர்கள் குறித்த ஊடக சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.

மாகாணசபைத் தேர்தல் இவ்வருடம் நடத்தப்படமாட்டாது என ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் அறிவித்துள்ள நிலையிலேயே, எதிரணி தலைவர்கள் இணைந்து, இவ்வருடத்துக்குள் தேர்தலை கோரியுள்ளனர்.

தேவையான சட்டத்திருத்தங்களை விரைவில் மேற்கொள்ளுமாறும், பழைய முறைமையிலாவது தேர்தலை நடத்துமாறும் வலியுறுத்தினர்.

 

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!