எதிரிகள் கலப்புப் போர் முறைகளை கையாளுகின்றனர் – ஈரான் உளவுத்துறை குற்றச்சாட்டு
ஈரானுக்கு எதிராக செயல்படும் தரப்புகள் தற்போது “கலப்புப் போர்” (Hybrid Warfare) முறைகளை பயன்படுத்தி வருகின்றன என்று ஈரான் உளவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
போர்க்களத்தில் எதிரிகள் தோல்வியடைந்ததால், அவர்கள் தற்போது பொருளாதார அழுத்தம், இணையத் தாக்குதல்கள், ஆயுதக் கடத்தல், படுகொலை முயற்சிகள் மற்றும் ஊடகப் பிரச்சாரங்கள் போன்ற மாற்று தந்திரங்களை கையாளுகின்றனர் என அந்த அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது.
மேலும், “இராணுவ ரீதியாக தோல்வியடைந்த எதிரி, இப்போது மென்போர், அறிவாற்றல் போர் மற்றும் சமூகக் குழப்பங்களை தூண்டும் நடவடிக்கைகளில் கவனம் செலுத்துகிறது” என்றும் தெரிவித்துள்ளது.
ஃபார்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, உளவு நடவடிக்கைகள் அல்லது “பிரிவினைவாத செயல்பாடுகள்” மேற்கொள்ளப்படும் பட்சத்தில், அதற்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஈரான் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.



