எதிரிகளின் கலப்பு போர்முறை குறித்து ஈரான் உளவுத்துறை எச்சரிக்கை!
நேரடி ராணுவ மோதல்களில் தோல்வியடைந்த எதிரிகள் தற்போது கலப்புப் போர் (hybrid warfare) முறைகளைக் கையாள்கின்றனர் என்று ஈரான் உளவுத்துறை அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
பொருளாதாரத் தடைகள், சைபர் தாக்குதல்கள் மற்றும் தவறான ஊடகப் பிரச்சாரங்கள் மூலம் மக்களின் சிந்தனையை மாற்ற எதிரணிகள் முயற்சிக்கின்றனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
” சமூகத் தூண்டுதல்கள் மற்றும் உளவியல் ரீதியான தாக்குதல்களைத் தொடுப்பதன் மூலம் நாட்டை நிலைநடுங்கச் செய்ய எதிரிகள் திட்டமிடுகின்றனர்.
பிரிவினைவாத நடவடிக்கைகள் அல்லது உளவு வேலைகளில் ஈடுபடும் எவருக்கும் எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.” எனவும் ஈரான் உளவுத்துறை அமைச்சு எச்சரித்துள்ளது.
ஈரானின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக விளங்கும் இந்த மறைமுக உத்திகளை முறியடிக்க அந்நாட்டு அரசு தீவிரமாக செயல்பட்டுவருகின்றது என்பதை இந்த அறிவிப்பு வெளிப்படுத்துகின்றது.




