இந்தியா செய்தி தமிழ்நாடு

எம்எல்ஏக்களின் தாவல்களால் தடுமாறும் அதிமுக!

அதிமுகவில் உள்ளக மோதல் உக்கிரமடைந்துள்ளது. ஏற்கனவே மூன்று எம்எல்ஏக்கள் பதவி விலகியுள்ள நிலையில் இன்று மேலும் ஒருவர் ராஜினாமா செய்துள்ளார்.

அம்பாசமுத்திரம் தொகுதி அதிமுக எம்எல்ஏ இசக்கி சுப்பையா என்பவரே இவ்வாறு பதவி விலகியுள்ளார்.

அதிமுக தற்போது இரண்டு அணிகளாக பிளவு பட்டிருக்கும் நிலையில், அதிலுள்ள பலர் தவெகவை நோக்கி படையெடுக்கின்றனர்.

சி.வி.சண்முகம் தரப்பு அதிமுக எம்எல்ஏக்கள் மரகதம் குமரவேல் (மதுராந்தகம்-தனி), ஜெயக்குமார் (பெருந்துறை), சத்யபாமா (தாராபுரம்-தனி) ஆகிய 3 பேரும் நேற்று தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவைத் தலைவர் ஜேசிடி. பிரபாகரை சந்தித்து ராஜினாமா கடிதம் அளித்தனர்.

அவர்களது ராஜினாமா ஏற்கப்பட்டதாக பேரவைத் தலைவர் பிரபாகர் அறிவித்தார்.

அத்துடன், அவர்கள் தங்களை தவெகவில் இணைந்துக் கொண்டனர்.

இந்நிலையிலேயே அம்பாசமுத்திரம் தொகுதி அதிமுக எம்எல்ஏ, இசக்கி சுப்பையா இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இசக்கி சுப்பையா விரைவில் தவெகவில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவர் 2011, 2021 தேர்தல்களில் வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெயலலிதா ஆட்சியில் இவர் அமைச்சராகவும் இருந்திருக்கிறார்.

இசக்கி சுப்பையாவை தொடர்ந்து மேலும் சில அதிமுக எம்எல்ஏக்களும் தவெக பக்கம் சாயலாம் என்று கூறப்படுகிறது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!