ஸ்டர்ஜன்–முரெல் வீடு சோதனையில் நீல கூடாரம் – பொலிஸார் விளக்கம்
ஆபரேஷன் பிரான்ச்ஃபார்ம் (Operation Franceform) விசாரணையின் போது அமைக்கப்பட்ட நீல நிற தடயவியல்
கூடாரம் குறித்து ஸ்கொட்லாந்து பொலிஸார் விளக்கமளித்துள்ளனர்
முன்னாள் முதல் அமைச்சர் Nicola Sturgeon (நிக்கோலா ஸ்டர்ஜன்)மற்றும் முன்னாள் SNP தலைமை நிர்வாகி Peter Murrell (பீட்டர் முரெல்)ஆகியோரின் வீட்டில் 2023 ஏப்ரலில் நடத்தப்பட்ட சோதனையின் போது இந்த கூடாரம் அமைக்கப்பட்டது.
விசாரணையின் ஒருங்கிணைப்பையும் ஆதாரங்களின் பாதுகாப்பையும் உறுதி செய்யவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக
பொலிஸார் தெரிவித்துள்ளனர்
கொள்வனவு செய்த பொருட்களில் சில இன்னும் வீட்டில் இருந்ததால், விசாரணைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருக்க கூடாராம் அவசியமானது என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மேலும், அனைத்து குற்றச்சாட்டுகளையும் முழுமையாகவும் நியாயமாகவும் விசாரிப்பது பொலிஸாரின் கடமை எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.





