தீ விபத்துக்கான சமிக்ஞை : ஏர் இந்தியா விமானம் அவசர தரையிறக்கம்!
பெங்களுருவில் இருந்து டெல்லி நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லியை நெருங்கிக் கொண்டிருந்தபோது அவசர நிலையை அறிவித்தது.
விமானத்தின் என்ஜின் பகுதியில் தீ விபத்து ஏற்படுவதற்கான சமிக்ஞைகள் தெரிவதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து முழுமையான அவசர நிலை அறிவிக்கப்பட்டது.
171 பயணிகளை ஏற்றிச் சென்ற ஏர்பஸ் A320 ரக விமானம் பின்னர் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்திற்கான காரணம் குறித்து ஏர் இந்தியா நிறுவனம் முழுமையான விசாரணையைத் தொடங்கியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.




