உலகம்

அமெரிக்காவில் கிரீன் கார்ட் பெற கட்டுப்பாடு : ட்ரம்பின் புதிய அறிவிப்பு!

அமெரிக்காவில் கிரீன் கார்டு பெற விரும்பும் வெளிநாட்டினர், தங்கள் சொந்த நாட்டை விட்டு வெளியேறி அங்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று ட்ரம்ப் நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த சர்ச்சைக்குரிய உத்தரவு நேற்று பிறப்பிக்கப்பட்டது.

சட்டப்பூர்வ குடியேற்றத்தை மேலும் கடினமாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ட்ரம்ப் நிர்வாகத்தின் இந்த எதிர்பாராத உத்தரவால் அமெரிக்கக் குடிமக்களைத் திருமணம் செய்தவர்கள், வேலை மற்றும் மாணவர் விசா வைத்திருப்பவர்கள், அகதிகள் மற்றும் அரசியல் தஞ்சம் கோருபவர்கள் உள்ளிட்டோர் பாதிக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் (USCIS) வெளியிட்ட அறிவிப்பில், அமெரிக்காவில் தற்காலிகமாக வசிக்கும் வெளிநாட்டினர் கிரீன் கார்ட் பெற விரும்பினால் அவர்கள் அமெரிக்காவில் இருந்து வெளியேறி  தங்கள் சொந்த நாட்டில் விண்ணப்பிக்க வேண்டும். இந்த செயல்முறையை USCIS கண்காணிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் “மாணவர்கள், தற்காலிகப் பணியாளர்கள் அல்லது சுற்றுலா விசாக்களில் வருபவர்கள் போன்ற குடியேறாதவர்கள், அவர்களின் நோக்கம் முடிந்தவுடன்  நாட்டை விட்டு வெளியேறும் வகையில் புதிய திட்டம் கொண்டுவரப்படவுள்ளது.

 

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!