அலுத்கமவில் தலையின்றி கரையொதுங்கிய உடலால் பரபரப்பு!
அலுத்கம, மொரகல்லவில் தலையின்றிய உடல் ஒன்று கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
மொரகல்லவில் உள்ள ஒரு பிரபலமான சுற்றுலா விடுதிக்குப் பின்புறம் அமைந்துள்ள கடற்கரையில், இந்த உடல் கண்டறியப்பட்டுள்ளது.
கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய அப்பகுதிக்கு விரைந்த பொலிஸார் உடலை கைப்பற்றி விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கண்டெடுக்கப்பட்ட எச்சங்கள் ஆண் ஒருவருக்கு சொந்தமானது என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.





