ஐரோப்பா

யுரேனியம் கொண்ட ஏவுகணையை ஏவிய ரஷ்யா : பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

கடந்த மாதம் செர்னிஹிவ் (Chernihiv) மாகாணத்தில் ரஷ்யா ஏவிய குறைக்கப்பட்ட யுரேனியம் கொண்ட  ஏவுகணையிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சியின் அளவு அதிகரித்துள்ளதாக  உக்ரைனின் பாதுகாப்பு சேவை (SBU) குறிப்பிட்டுள்ளது.

இதனால்  ஏற்படக்கூடிய சுகாதார அபாயங்கள் குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக தரையில் ஏதேனும் சிதைவுகளையோ அல்லது வெடிக்காத வெடிமருந்துகளையோ கண்டால் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு SBU வலியுறுத்தியுள்ளது.

இதற்கிடையே நேட்டோவிற்கான ஆதரவு செலவீனங்கள் சமமாக பகிரப்படவில்லை என  அதன் தலைவர் மார்க் ரூட்டே குற்றம் சாட்டியுள்ளார்.

ஒரு சில நாடுகள் மட்டுமே இந்த முயற்சியை முன்னெடுத்துச் செல்வதாக குறிப்பிட்ட அவர், உக்ரைனின் நட்பு நாடுகள் தங்கள் நிதிப் பங்களிப்புகளை அதிகரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

ஸ்வீடன், கனடா, ஜெர்மனி, நெதர்லாந்து மற்றும் டென்மார்க் உள்ளிட்ட ஒரு “வரையறுக்கப்பட்ட” நாடுகளின் குழு இந்த முயற்சிக்குத் தலைமை தாங்குவதாகவும், ஆனால் மற்ற பல நாடுகள் “உக்ரைனுக்கான ஆதரவைப் பொறுத்தவரை போதுமான அளவு செலவு செய்யவில்லை” என்றும் அவர் கூறினார்.

 

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!