ஐரோப்பா

ஜெர்மனியில் தாக்குதலுக்கு சதித்திட்டம் : இருவர் மீது வழக்கு தாக்கல்!

ஜெர்மனியில் உள்ள யூத அமைப்புகளின் முக்கியத் தலைவர்களைக் கொலை செய்ய சதித்திட்டம் தீட்ட உதவியதாக சந்தேகிக்கப்படும் இருவர் மீது குற்றவியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

டேனிஷ் மற்றும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த இருவரும் ஈரானுக்கு ஆதரவாக மேற்படி தாக்குதல்களை முன்னெடுக்க சதித்திட்டம் தீட்ட உதவியதாக கூறப்படுகிறது.

ஜெர்மன் தரவு தனியுரிமைச் சட்டங்களின்படி, டேனிஷ் நாட்டவரான அலி எஸ் (Ali S) . மற்றும் ஆப்கானிய நாட்டவரான தவாப் எம் (Tawab ⁠M) என அடையாளம் காணப்பட்டுள்ள இருவர் மீதும் கொலை முயற்சி குற்றச்சாட்டு  சுமத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக அலி எஸ்., ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் உளவுத்துறைக்காகப் பணியாற்றியதாகவும், அவர்களின் சிறப்புப் பிரிவான குட்ஸ் படையுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

2025-ஆம் ஆண்டின் தொடக்கத்தில், ஜெர்மனியில் உள்ள யூதர்களின் மத்திய கவுன்சிலின் தலைவர் ஜோசப் ஷூஸ்டர் மற்றும் ஜெர்மன்-இஸ்ரேலிய சங்கத்தின் தலைவர் வோல்கர் பெக் ஆகியோரைப் பற்றிய தகவல்களைச் சேகரிக்கும் பணி அவருக்கு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அதேபோல் பெர்லினில் உள்ள இரண்டு யூத மளிகைக் கடைக்காரர்களை உளவு பார்க்குமாறும் அவருக்கு அறிவுறுத்தப்பட்டதாக  வழக்கறிஞர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

“ஜெர்மனியில் கொலை மற்றும் தீவைப்புக் தாக்குதல்களை மேற்கொள்வதற்காக குறித்த இருவரும் உளவு பார்த்ததாக தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும் இந்த குற்றச்சாட்டுகளை ஈரானிய தூதரகம் மறுத்துள்ளது.

 

 

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!