செய்தி விளையாட்டு

படுதோல்வியுடன் வெளியேறியது CSK அணி!

2026 ஐபிஎல் தொடரில் லீக் சுற்றோடு Chennai Super Kings (CSK) அணி வெளியேறி உள்ளது.

Gujarat Titans உடனான கடைசி லீக் ஆட்டத்தில் 89 ஓட்டங்கள் வித்தியாசத்தில் CSK அணி படுதோல்வி அடைந்தது.

அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடந்த இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வென்ற CSK அணி முதலில் பந்து வீச்சை தெரிவு செய்தது.

இதற்கமைய துடுப்பெடுத்தாடிய குஜராத் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 229 ஓட்டங்களைப் பெற்றது.

230 ஓட்டங்கள் என்ற இலக்கை விரட்டிய CSK அணி, 13.4 ஓவர்களில் 140 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது படு தோல்வி அடைந்தது.

இதன் மூலம் குஜராத் அணி 89 ரன்களில் வெற்றி பெற்றது. இந்த தோல்வியின் மூலம் நடப்பு IPL சீசனில் இருந்து CSK  அணி வெளியேறி உள்ளது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!